புதன், டிசம்பர் 24

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
எழுதுவதெல்லாம்
கவிதையாகிறது
உன்னையே
எழுதுவதுதான்
காவியமாகிறது..!


உன்னை அணைக்க
நினைக்கும்போதெல்லாம்
என்னை பார்த்து
நிலா சிரிக்கிறது.


மரபுக்கவிதையா
வெண்பாவா
எனக்குத்தெரியாது
ஆனால்
நிச்சயம் நீ
புதுக்கவிதைதான்.


என் இதயம்
செய்யும் துரோகம்
என்னிடம் இருந்துகொண்டே
உன்னை நினைப்பது!


நீ விலக விலக
இறுகுகிறது
அன்பு!

6 கருத்துகள்:

 1. //நீ விலக விலக இறுகுகிறது அன்பு!//
  அம்புக்குறியிடும் அன்புதானே எல்லாவற்றையுமாய்
  சொல்ல வைக்கிறதது,கூடவே இனக்கவர்ச்சியும்
  கைகோர்த்துக்கொண்டு/

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே!

  உன்னும் நினைவுகள் உண்ணும் உடனிருந்து
  இன்னுமே கேட்கும் எழுது!

  இனிய திருநாள் வாழ்த்துக்கள் சகோ!

  உங்கள் கவிதையும் மிக அழகு!..
  ஆமாம் உங்களின் ஃபோலாவராக நானிருந்தும் ஏன் எனக்கு
  உங்கள் பதிவுகள் ஒன்றுமே டாஷ்போர்டில் காட்டவில்லை..:(
  தற்சமயம் இங்கு வந்து கண்டேன் பதிவுகளை..!

  இத்தனைநாள் வரவில்லையே இங்கென மனம் வருந்துகின்றேன் சகோதரரே!

  இனிய வாழ்த்துக்கள்! தொடருங்கள்!...

  பதிலளிநீக்கு
 3. படமும் கவிதையும் ரசிக்க வைத்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. என் இதயம்
  செய்யும் துரோகம்
  என்னிடம் இருந்துகொண்டே
  உன்னை நினைப்பது!
  ஆமால்ல..... எப்படி இதை கண்டு பிடிச்சீங்க யாரும் இதுவரை சொல்லாதவை இல்லையா?
  விலகினாலும் வேறாகாது வருத்தும் அன்பு. அருமை அருமை! அடேங்கப்பா சுருங்க சொல்லி எவ்வளவு பெரிய விடயத்தை புரிய வைத்துளீர்கள். அருமை அருமை ! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!  பதிலளிநீக்கு
 5. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்,படங்கள்+கவிதைகள்=நச்சு நச்சுன்னுவாழ்த்துக்கல்சகோ.

  பதிலளிநீக்கு