வெள்ளி, ஜனவரி 23

பெண்பாவம்


படித்த பட்டங்கள்
பரணில்
தூங்குகின்றன

வேலைகளில்
பெரிதாய் மாற்றமில்லை
காலையில் காபி போடுவதில்
ஆரம்பித்து
இரவில் கால் அமுக்குவதில்
முடிகிறது

பாரதிகண்ட புதுமைப்பெண்
நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
நான் நடந்தால் மட்டும்
திமிர்பிடித்தவள்

ஆனாலும்
நவீன ராமன்கள்
நல்லவர்கள்தாம்
வாங்கிய தட்சணைக்கு
விறகைத் தேடுவதில்லை
சிலிண்டர்தான்..!


4 கருத்துகள்:

 1. பெண் - பாவம்
  பெண்பாவம்...
  காலமாற்றம்
  காஸ் சிலிண்டர்...!!!

  பதிலளிநீக்கு
 2. ஹா..ஹா.. என்ன விச்சு?:) என்னாச்சு?:)

  ///காலையில் காபி போடுவதில்
  ஆரம்பித்து
  இரவில் கால் அமுக்குவதில்
  முடிகிறது///

  ஹா..ஹா... இது எந்த நாட்டில் இப்போ பெண்கள் செய்கிறார்கள்:) இதெல்லாம் இப்போ ஆண்களின் கைக்கு மாற்றப்பட்டு விட்டது:) அதிக அன்பினால்ல்ல்:)..

  பதிலளிநீக்கு