வியாழன், செப்டம்பர் 22

அதற்கும் அப்பால்....

நிமிடத்தில் 
நூறு ஹைக்கூ
முடியுமா? என்றாய்!

நாம்
அமர்ந்திருந்த
அந்த
கடற்கரை மணலில்
என்னை
மையப்படுத்தி
ஓர் நீள் வட்டமாய் ஓடி
வரச்சொன்னேன் உன்னை!
பின்
நீ
மூச்சிரைத்து
மெல்ல
ஆசுவாசப்படுத்துகையில்
மெதுவாய் சொன்னேன்
உன் பாதச்சுவடுகளைக் காட்டி
போதுமாவென்று!!
                                      -  இராஜபாளையம் நந்தன்

2 கருத்துகள்:

 1. ஆசுவாசப்படுத்துகையில்
  மெதுவாய் சொன்னேன்
  உன் பாதச்சுவடுகளைக் காட்டி
  போதுமாவென்று!!///
  அசத்தலான வரிகள்..

  கவிதை அருமை...

  பதிலளிநீக்கு
 2. உண்மைதான் கருன்..'ஆசுவாசப்படுத்துதல்' இந்த மாதிரி வார்த்தைகளை இப்போது கேட்க முடிவதில்லை.

  பதிலளிநீக்கு