வியாழன், செப்டம்பர் 22

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளில் தற்போதைய கல்வி கற்கும் முறை

அரையாண்டு ஒரு பெருங்குற்றம்
முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்
     தற்போதைய  மாணவனின் மனநிலை இதுதான். இருந்தாலும் அரசாங்கம் மாணவர்கள் அனைத்துத் திறன்களையும்  எந்த முறையிலாவது அடைய வேண்டும் என நினைக்கிறது. இதனால் கொண்டு வரப்பட்டத் திட்டம் செயல்வழிக்கற்றல் (ABL) .ACTIVITY BASED LEARNING  இது கிண்டலாக  அட்டை BASED LEARNING  என அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி தொடக்கநிலை ஆசிரியர்களைத் தவிர எத்தனை பேருக்குத் தெரியும்.

ABL யைப் பற்றி :
                           1 முதல் 4 வரை படிக்கும் மாணவர்களுக்கு வண்ணங்களாலான அட்டை வழங்கப்பட்டுள்ளது.
1 ம் வகுப்பு - சிவப்பு
2 ம் வகுப்பு - பச்சை
3 ம் வகுப்பு - நீலம்
4 ம் வகுப்பு - மஞ்சள்
    இந்த அட்டைகளில் ஒவ்வொரு பாடத்திற்குமெனச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் - விலங்குகள்
ஆங்கிலம் - போக்குவரத்துச் சாதனங்கள்
கணிதம் - பறவைகள்
சூழ்நிலையியல் - பூச்சிகள்
சூ.சமூகவியல் - விளக்குகள்
   பல சின்னங்கள் சேர்ந்தது படிநிலைகள் எனவும், பல படிநிலைகள் சேர்ந்தது ஏணிப்படி (LADDER ) எனவும் அழைக்கப்படுகிறது.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஏணிப்படி தொங்கவிடப்பட்டுள்ளது. அவற்றிலுள்ள சின்னங்களுக்கான அட்டைகள் 'Plastic Tray'யில் சின்னம் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
      மாணவன் ஏணிப்படியில் சின்னத்தைப் பார்த்து  அதற்குரிய அட்டையை Plastic Tray'யில் போய் எடுத்து அந்த சின்னம் எந்த குழுவில் அமைந்துள்ளதோ அங்கு போய் அமரவேண்டும். மொத்தம் 6 குழு அட்டைகள் தனித்தனியாகப் போடப்பட்டிருக்கும்.
1 வது குழு - ஆசிரியரின் முழுமையானத் துணையுடன் இயங்கும் ( இது 6 வாரம் மட்டும் இருக்கும் )
2 வது குழு - ஆசிரியரின் முழுமையானத் துணையுடன் இயங்கும்.
3 வது குழு - ஓரளவு ஆசிரியர் உதவி தேவைப்படும்.
4 வது குழு - சக மாணவர் உதவி செய்யும் குழு.
5 வது குழு - ஓரளவு சக மாணவர் உதவி தேவைப்படும் குழு.
6 வது குழு - தானே கற்றல் குழு.

வகுப்பறை நிர்வாகம் :


- ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாகப் பாய்கள் போடப்பட்டிருக்க வேண்டும்.
- கீழ்மட்டக் கரும்பலகை இருக்க வேண்டும்.ஒவ்வொரு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். மாணவனை அதில் எழுத அனுமதிக்க வேண்டும். அதைத் திரும்பப் பயன்படுத்தும் வரை அவற்றிலுள்ளதை அழித்தல் கூடாது.
- கம்பி பந்தல் - இது ஆசிரியருக்கு எட்டும்படி அமைத்திருக்க வேண்டும். மாணவனின் படைப்பினை அதில் தொங்கவிட வேண்டும். அதில் ஆசிரியர் தேதியுடன் கையொப்பமிட்டிருக்கவேண்டும்.
- சுய வருகைப்பதிவேடு இருக்கவேண்டும்
ஆரோக்கிய சக்கரம் இருக்கவேண்டும்.
- காலநிலை அட்டவணை பயன்படுத்த வேண்டும்.
- முன்புறம் சின்னங்கள் ஒட்டப்பட்ட 'Plastic Tray'  வைப்பதற்கு மாணவனுக்கு எட்டும் உயரத்தில் அலமாரி இருக்க வேண்டும்.
- புத்தகப் பூங்கொத்து தனியாகப் பயன்பாட்டில் இருக்கவேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் நூற்றுக்கணக்கானப் புத்தகங்க்கள் வழங்கப்பட்டுள்ளன.
- கணிதப்பாடதிற்கென SALM Kid box வழங்க்கப்பட்டுள்ளது.
ABL'ன் பயன்கள்:
- குழந்தைகள் அவரவர் வேகத்திற்கு கற்க முடியும். சில நாட்கள் பள்ளிக்கு வரவில்லையென்றாலும் அந்த மாணவர் எந்த அட்டையில் விட்டுச்சென்றாரோ அதைத் திரும்பவும் தொடர முடியும்.இதனால் மாணவருக்கு எந்தத் திறனும் விடுபடாது.
- கற்றல் அட்டைகள் ஆர்வம் ஊட்டுவதாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ளது.
- ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள இடைவெளி குறைய வாய்ப்புள்ளது.
- புதியக் கற்றல் உத்திகள் செயல்படுத்தப்படுகின்றன.
- ஆசிரியர் தன் நேரத்தைக் கற்றலில் குறைபாடுடைய குழந்தைக்கு ஒதுக்க முடியும்.
- மாணவனுக்குத் தேர்வின் பயம் போக்கப்படுகிறது. அவனையறியாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாதக அம்சங்கள் :
      இது ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் பாதக அம்சங்களும் உள்ளன. ஆசிரியர்களும் பொதுமக்களும் கீழே உள்ள கருத்துக்களை கூறுகின்றனர்.
- வயதான ஆசிரியர்கள் கீழே அமர்ந்து கற்றுக் கொடுப்பதில் பிரச்சினை உள்ளது.
- ஆசிரியர்கள் முழுமையாக மாணவர்களைப் பார்வையிட முடிவதில்லை.
- பெரும்பாலான ஆசிரியர்களின் குற்றச்சாட்டு இன்றைக்கு என்ன கற்றுக் கொடுத்தோம் என்ற திருப்தியில்லை.
- இது ஒரு நல்ல திட்டம் என்றால் ஏன் அனைத்து விதமான பள்ளிகளும் (MATRIC, ANGLO INDIAN போன்றவை) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும் STATE BOARD'ல் பயிலும் மாணவர்களையும் எவ்வாறு தரம் பிரிப்பது?
- அட்டைகள் மட்டும் கற்பிக்க போதுமென்றால் புத்தகங்கள் ஏன் வழங்கப்படுகின்றன. அல்லது அட்டைகளில் உள்ள கருத்துகளையே புத்தகத்திலும் ஏன் இடம் பெறச்செய்யவில்லை.
- இது ஒரு நல்ல திட்டம் என்றால் STATE BOARD பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன?
- சமச்சீர் புத்தகத்திலேயே அதிகமான பாடக்கருத்துக்கள் உள்ள போது இதையும் சேர்த்து எவ்வாறு நடத்துவது?
       எது எவ்வாறு இருப்பினும் மாணவர் நலன்  ஒன்றையே கருத்தில் கொண்டு அரசு செயல்படுத்தும் திட்டத்தை கொண்டு சேர்ப்பதே சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக