செவ்வாய், அக்டோபர் 4

கொஞ்சம் கடி...கொஞ்சம் சர்தார்ஜி

சர்தார் 1:இந்த மெஷின் வாங்கினா உங்க வேலை பாதி குறையும்.
சர்தார் 2 : அப்போ 2 கொடுங்க.
     *           *             *             *              *
சர்தார் ஒரு பெண்ணிடம் போய் ஐ லவ் யூ சொன்னார். அந்தப் பெண்ணோ நான் உங்களை விட ஒரு வயது இளையவள் என்றாள். உடனே சர்தார் அப்போ அடுத்த வருஷம் உன்னையை நான் லவ் பண்றேன் என்றார்.
சர்தாரும் அவருடைய மனைவியும் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்தார்கள்.
நீதிபதி அவர்களிடம்   3 குழந்தைகளை எப்படி பிரிப்பது? என்றார். உடனே சர்தார் "OK! நாங்க அடுத்த வருஷம் விண்ணப்பிக்கிறோம்" என்றார்.
        *                *              *              *          *
சர்தாருக்கு 20 ரூபாய் லாட்டரியில் 15 கோடி ரூபாய் பணம் விழுந்தது. விநியோகிஸ்தர் வரியை பிடித்தது போக மீதிப் பணம் ரூ11 கோடியை கொடுத்தார். உடனே கோவமான சர்தார் 15 கோடி ரூபாயைக் கொடுகிறாயா? அல்லது என்னுடைய 20 ரூபாயைக் கொடு என்றார்.
      *                 *            *                  *              *
ஒரு சர்தார் ரத்தப் பரிசோதனைச் சாலையிலிருந்து அழுது கொண்டே வெளியே வந்தார். இன்னொரு சர்தார் ஏன் அழுகிறீர்கள்? எனக்கேட்டார். முதலாமவர் எனக்கு 'BLOOD TEST",என்னுடைய விரலை வெட்டி விட்டார்கள் என்றார். அதைகேட்டவுடன் இன்னொரு சர்தார் 'ஓ' வென்று அழுதார். ஏன் எனக் கேட்டபோது, நான் "URINE TEST" பண்ண வந்தேன் என்றார்.

சர்தார் : நான் இறந்தவுடன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா?
மனைவி : மாட்டேன்! நான் என் தங்கையுடன் சேர்ந்து இருப்பேன். சரி நான் இறந்தால்?
சர்தார் : நானும் உன் தங்கையுடந்தான் இருப்பேன்.
       *                      *               *              *                 *
சர்தார் 1: நான் உன்னுடைய ATM பாஸ்வேர்டினைப் பார்த்துட்டேன். அது '* * * *' சரிதானே?
சர்தார் 2 : தப்பு...தப்பு.. ஹா ஹா ஹா  அது 1234.

சர்தார் கண்ணாடியின் முன்பு கண்ணை மூடிக்கொண்டு நின்றார். அவருடைய மனைவி என்ன பண்றீங்க எனக் கேட்டாள் . நான் தூங்கும் போது எப்படி இருப்பேன்னு பார்த்தேன் என்றார்.

சர்தார், உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் அவருடைய சீன நண்பரை பார்க்க சென்றார். போய் அவரின் அருகில் நின்றார். சீன நண்பர் இவரை பார்த்து 'சி யு யான்' எனச் சொல்லிக்கொண்டே இருந்தார். சர்தாருக்குப் புரியவில்லை. சிறிது நேரத்தில் சீன நண்பர் இறந்து விட்டார். பின்னர்தான் தெரிந்தது " ஆக்சிஜன் டியூப்'பிலிருந்து காலை எடு என்பதைத்தான் அவர் சீன மொழியில் சொல்லியுள்ளார்.
                                 *    *      *      *     *
நீதிபதி : உங்களை ஏன் கைது பண்ணினாங்க?
சர்தார் : கடையில போய் 'shopping' பண்ணினேன்.
நீதிபதி : அதுக்கு எதுக்கு கைது பண்ணினாங்க.
சர்தார் : அப்போ கடையே திறக்கல.
      *     *       *     *     *
வட்டம், சதுரம் - இதில் எது புத்திசாலி?
சதுரம்...இதில்தான் 4 மூலைகள் இருக்கு.
    *      *     *     *    *

இண்டெர்வியூவில் - எலெக்ட்ரிக் மோட்டார் எப்படி வேலை செய்யும்?
சர்தார் : டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
INT :  Stop it.
sarthaar :  டர்..டர்...டப்டப்டப்
       *     *    *    *    *
நெப்போலியன் : என் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது.
சர்தார் : அகராதி வாங்கும்போதே பார்த்து வாங்க வேண்டியதுதான.
          *      *       *     *    *
வாகனத்தில் உள்ள இரண்டு டயர் மாதிரி கணவனும் மனைவியும். ஒரு டயர் பஞ்சர் ஆனாலும் வண்டி நகராது.
நீதி : எப்பவும் ஒரு டயர் 'Spare' வச்சுக்கிறது நல்லது.
     *      *        *       *        *

மாணவன் : Can I go to bathroom?
ஆசிரியர்: May I go to the bathroom?
மாணவன் : But I asked first.        
         *         *      *       *     *
ஆசிரியர் : I miss You.
சர்தார் : I student you.
       *             *         *          *          *
எந்த 2 வார்த்தையில் அதிகமான 'LETTER' இருக்கும்.
 POST OFFICE.
    *      *       *      *      *
 காதலிக்கும்போது காதலி பேசுவாள். காதலன் கேட்பான்.
கல்யாணத்தின் போது காதலன் பேசுவான். காதலி கேட்பாள்.
சில வருடங்களுக்குப் பிறகு இருவரும் பேசுவார்கள். ஊரே கேட்கும்.
       *          *            *             *         *

Never kiss a lady police
She will say, hands up
Never kiss a lady doctor
She will say, next please
Always kiss a lady Teacher
She will say, repeat it 5 Times.
    *      *           *             *           *





8 கருத்துகள்:

  1. அட... சிரிப்புக்கு கியாரண்டியான சர்தார்ஜி ஜோக்ஸ். அதிலும் ஸ்டாப் தி மோட்டார்... சூப்பர்.

    பதிலளிநீக்கு