வெள்ளி, அக்டோபர் 7

புரிந்தும் புரியாத புதிர்

      எங்கள் ஊர் தமிழாசிரியர் ஒரு புதிர் சொன்னார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பதில் தெரிந்தால் கருத்துரையில் தெரிவியுங்கள்.

 "முக்காலை ஊன்றி மூவின் நகருக்குப் போகயில
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தது.
பத்து ரதனின் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கித் தேய்.இதன் அர்த்தம் என்ன?
    இன்னொரு புதிர்:   ஒரு கட்டிடதின் உள்ளே நுழைய வேண்டுமென்றால் பாதுகாவலன் ஒரு வினா எழுப்புவான். அந்த வினாவிற்கு சரியான பதில் சொன்னால் உள்ளே அனுப்புவான். தவறாகச் சொன்னால் தலையை வெட்டி விடுவான். அந்த கட்டிடத்தில் என்ன உள்ளது என அறிய துப்பறியும் நிபுணன் ஒருவன்  விரும்பினான். எனவே பாதுகாவலன் என்ன கேள்வி கேட்பான் என அறிய ஒழிந்திருந்து பார்வையிட்டான்.அப்போது கட்டிடத்தில் நுழைய ஒருவன் வந்தான்.அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '12' என்று சொன்னான். வந்தவனோ'6' என்றான். உள்ளே அவனை அனுப்பி விட்டான். அடுத்து ஒருவனிடம் '6' என்றான் வந்தவனோ '3'  என்றான். அவனையும் அனுப்பி விட்டான். உடனே துப்பறியும் நிபுணர் ஓ! இவ்வளவுதானா! என நினைத்து இவன் சென்றான். அவனிடம் பாதுகாவலன் ஆங்கிலத்தில் '10' என்று சொன்னான்.துப்பறியும் நிபுணர் '5' என்றார். பாதுகாவலன் இவர் தலையை வெட்டி விட்டான். அப்போ! சரியான பதிலென்ன?
     3 நாட்களுக்கு அப்புறம்  இதே பதிவின் கருத்துரையில் பதில் வெளியிடுகிறேன். அதுவரை கொஞ்சம் யோசிங்க!!!

8 கருத்துகள்:

  1. //முக்காலை ஊன்றி மூவின் நகருக்குப் போகயில
    அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தது.
    பத்து ரதனின் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
    பத்தினியின் கால் வாங்கித் தேய்////

    மரணாமாய் இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  2. ///முக்காலை ஊன்றி மூவின் நகருக்குப் போகயில
    அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தது.
    பத்து ரதனின் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
    பத்தினியின் கால் வாங்கித் தேய்///

    ஏதோ ராமாயணக் காட்சி போல் தெரிகிறது...
    பத்து ரதனின்- தசரதன்...
    மித்திரனின் சத்துரு-?

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவதின் விடை மூன்று

    பதிலளிநீக்கு
  4. எப்படி மூன்று என்று நீங்கள் இரண்டு நாட்கள் கழித்து சொல்லுங்கள், சரியான பதிலா இல்லையா என்று இப்பொழுது சொல்ல வேண்டாம், படிப்பவர்களும் மண்டையை பிய்த்துக் கொள்ளட்டுமே

    பதிலளிநீக்கு
  5. முதல் புதிருக்கு விடை
    அதாவது, காலில் முள் குத்தினால், அந்தக் காலைத் தரையில் தேய்க்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்

    http://www.tamiloviam.com/unicode/pettagampage.asp?fname=09290503&pfname=Pet-Muchchandhi

    பதிலளிநீக்கு
  6. suryajeeva சரியான பதில்... நீங்கள் கொடுத்துள்ள இணைப்பில் அருமையான விளக்கம் இருந்தது.நன்றி!!!

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவது வினாவிற்கான விடை - Twelve (Letters எண்ணிக்கை) 6. Six-3.எனவே Ten என்பதற்கு 3 என்பதே சரியான விடை.சரியாக இரண்டு பதில்களையும் சொன்ன Suryajeeva அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு