புதன், ஜனவரி 18

கனவிலும் நீ

காலைவேளை...
காலை அமுக்கியது போதும்...
போதும் செல்லம்.
சிணுங்கலாக நான்...
என்னங்க...
செல்லமாக அவள்.
காதில் தேனாக பாய்ந்த வார்த்தை.
இந்தாங்க ...
ஆஹா! அருமையான காபி.


நெற்றியில் ஒரு முத்தம்
கன்னத்தில் ஒரு முத்தம்
உதட்டிலும்...
செல்லம் இன்றைக்கு உனக்கு
என்ன ஆச்சு...
சிணுங்கலாக நான்...


ஏங்க...
செல்லமாக அவள்...
எத்தனை நாள் ஆச்சு!
இப்படி வார்த்தையை கேட்டு.
ம்ம்...சிணுங்கலாக நான்...
 சுடுதண்ணீர் வச்சிருக்கேன்.
போய் குளிச்சிட்டு வாங்க!


உங்களுக்குப் பிடிச்ச
மல்லிகைப்பூ இட்லி
மணமணக்கும் மல்லி சட்னியோட
வச்சிருக்கேன்.
செல்லமாக அவள்...


இந்தாங்க சாப்பிடுங்க..
இன்னும் ரெண்டு 
இட்லி சாப்பிடுங்க...


அயர்ன் பண்ணி வச்சிருக்கும்
அந்த லைட்கலர் 
சட்டையை   போடுங்க...
செல்லமாக அவள்...


ஆபிஸ் போயிட்டு சீக்கிரம் வாங்க
ம்ம்...சிணுங்கலாக நான்...


இன்னும் என்ன தூக்கம்
சீக்கிரம் எந்திரிச்சு காபி போடுங்க...
அதட்டலாக அவள்
எரிச்சலாக நான்.

13 கருத்துகள்:

  1. கனவு நனவாக வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ரிஷிமூலம் என்று ஒரு திரைப்படம். அதில் சுருளிராஜனின் மனைவியாக மனோரமா. கணவனை ஒரு மனிதனாகவும் மதியாத கேரக்டர். அப்போது சுருளிராஜன் கற்பனையாக ஒரு மனைவியை (அவரும் மனோரமாதான்) உருவாக்கி அவளுடன் இனிமையாகப் பேசி மகிழ்வார். அதை நினைவுபடுத்திவிட்டது தங்கள் கவிதை.

    எழுதியிருக்கும் விதம் மிகவும் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீதா, கனவு ஏற்கனவே நனவாயிடுச்சு சசி...

    பதிலளிநீக்கு
  4. விச்சு....பாவம் நீங்க.சிரிச்சு முடியல.கனவிலயாச்சும் சந்தோஷமா இருக்க விடமாட்டாங்களே !

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வருகைக்கு நன்றி ஹேமா...

    பதிலளிநீக்கு
  6. இப்புதிய வருடத்தில் இப்படியான சின்னச் சின்ன சந்தோஷக் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் விச்சு!

    சின்னனாய்; செல்லச் சிணுங்கலாய் கவிதை!வாழ்க்கை என்பது இப்படியான சின்னச் சின்னச் சந்தோஷங்களால் ஆனது தானே!

    பதிலளிநீக்கு
  7. பாவம்ங்க நீங்க.(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)

    பதிலளிநீக்கு
  8. athira,மணிமேகலா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.பரிதாபப்பட்ட ராஜிக்கு தனியாக நன்றி..நன்றி

    பதிலளிநீக்கு
  9. "(கல்யாணம் ஆயிடுச்சா சகோ?)" இக்கேள்விக்கு பதில் சொல்லவில்லையே நீங்கள்?

    சீரியல்களில்தான் இப்படி கடைசியில் கனவென்றோ நினைத்துப் பார்த்தார் என்றோ முடிப்பார்கள் . கவிதைக்கு நல்ல திருப்பமான முடிவு

    பதிலளிநீக்கு
  10. ஆயிடுச்சு வியபதி அதனால்தான் பரிதாபப்பட்ட ராஜிக்கு தனியாக நன்றி..நன்றி'னு சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் விச்சு - கனவும் நனவும் - நன்று நன்று - கனவு விரைவினில் நனவாக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா11 மார்ச், 2012

    நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு