செவ்வாய், ஜனவரி 17

அறிவியல் ஆனந்தம் II...பெட்ரோல்,டீசல்...

 டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
               பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக்  கொள்ளும்  எரிபொருள் ஆகும்.  பெட்ரோல்  எஞ்சினில் கார்புரோட்டல்  மூலம்  ஆவியாக்கப்பட்ட  பெட்ரோல்  ஆவியும்  காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6  முதல் 8  மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது. இதனால்  விசை உண்டாகிறது.
         டீசல் எஞ்சினில் கார்புரேட்டரும் மின்பொறி உருவாக்கியும் கிடையாது. டீசல் சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாவதில்லை. எஞ்சினால் காற்று மட்டுமே உள்ளிழுக்கப்படுகிறது. இந்த காற்று 4 முதல் 24 மடங்கு அழுத்தப்படுகிறது. இதன்மூலம் காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இவ்வாறு வெப்பமடைந்த காற்றினுள் இஞ்செக்டர் மூலம் டீசல் தெளிக்கப்படுகிறது. அப்போது அது உடனே தீப்பற்றி எரிந்து விசையை உண்டாக்குகிறது. இத்தகைய டீசல் எஞ்சினினுள் பெட்ரோல் போட்டால் அதிக வெப்பமுள்ள காற்றுடன் சேரும்போது திடீரென வெடிக்கும். அதனால் டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் போடக்கூடாது.
மூட்டைப்பூச்சி தண்ணீர் குடிக்குமா?
           மூட்டைப்பூச்சியின் வாய் உறுப்புகளில் இரண்டு குழல்கள் உள்ளன. அவற்றில் ஒன்றின் மூலம் தன் உமிழ்நீரை மனிதன் தோலிற்குள் செலுத்தும். அதேவேளையில் மற்றொன்றின் மூலம் மனித ரத்தத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும். மனித ரத்தத்தில் 90% தண்ணீர் உள்ளது. அதுவே மூட்டைப்பூச்சிக்குப் போதும். தண்ணீர் குடிக்காது.

2 கருத்துகள்: