வியாழன், ஜனவரி 26

மரங்கள்

இரும்பு மரங்கள்
இரும்பு மரங்கள்


இலையில்லை
கிளையில்லை
காயுமில்லை
கனியுமில்லை
ஊரெல்லாம்
தண்டு மட்டும் நிமிர்ந்து
இரும்பு மரங்களாய்
செல்போன் டவர்கள்!!
பட்ட மரம்
பட்ட மரம்


பருவத்தில்
என்னைச் சுரண்டித்
தின்று
என்னுடனே
சொந்தபந்தங்களாய்
பறவைகள்...  
முதுமையில்
பாம்பும் பல்லியும்
 ஊர்ந்து சென்று
வெட்டுப்பட
காத்திருக்கும்
காய்ந்த
பட்டமரமாய் தனிமையில்...

9 கருத்துகள்:

 1. விச்சு...இரண்டு சிந்தனைகளும் மாற்றமுடியாத வாழ்வியலாகிவிட்டது.
  அனுதாபங்கள் மட்டுமே !

  பதிலளிநீக்கு
 2. முதுமையில் பெற்றவர்களை சில பிள்ளைகள் தனித்து விட்டுவிடுகின்றனர். கருத்து பகிர்வுக்கு நன்றி ஹேமா!!

  பதிலளிநீக்கு
 3. இரும்பு மரங்களும் பட்டமரங்களும்தான் இன்றைய உலகமா?

  பதிலளிநீக்கு
 4. நாம் என்ன செய்கிறோமோ, அதையே நம் குழந்தைகள் நமக்கு திருப்பி செய்கிறார்கள் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 5. அருமை அருமை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 6. இரண்டுக்குமான உவமை அழகு அருமை

  பதிலளிநீக்கு
 7. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com

  பதிலளிநீக்கு
 8. ரிஷவன் உங்கள் வலைப்பூவினை நானும் படித்து வருகிறேன்.திருக்குறள் கவிதை வடிவில் தொடர்ந்து படிககிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. அன்பின் விச்சு - பட்ட மரமும் இரும்பு மரங்களும் - நன்று நன்று. பட்ட மரம் கவிதை சிந்திக்க வைக்கிறது. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு

Next previous home