சனி, ஜனவரி 28

அறிவியல் ஆனந்தம் 3

அறிவியல் ஆனந்தம் பகுதியில் சில சுவாரஸ்யமான துணுக்குகள்.

கண்ணீர் புகை குண்டில் புரோமைடு கூட்டுபொருள்கள் உள்ளன. இதிலிருந்து வரும் புகை இருமல், கண்ணீரை ஏற்படுத்தும். சில நேரம் கொப்புளங்கள், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வெங்காயைச் சாற்றைக் கண்ணில் பிழிந்து தப்பிப்பவர்களும் உண்டு.சோப்புகள் வெவ்வேறு நிறத்திலிருந்தாலும் நுரை மட்டும் வெள்ளையாகக் காட்சியளிக்கும்.நுரை மிகச்சிறிய நீர்க்குமிழி. இதில் காற்று உள்ளது. ஒளி இதன்மீது பட்டு எல்லாப்பக்கமும் எதிரொளிக்கும்.ஆதலால் நுரை மட்டும் வெள்ளையாகக் காட்சியளிக்கிறது.கலர் கண்ணாடியை எடுத்து உடையுங்கள். கலராகவே காட்சியளிக்கும்.நன்றாக அரைத்து எடுங்கள். வெண்மையாக காட்சியளிக்கும்.

ஜெராக்ஸ் கருவியில் வைக்கப்படும் தாளில் ஒளி பிரதிபலித்து நிலை மின்னேற்றம் பெற்ற செலினியம் உருளையில் பிம்பமாகிறது. டோனோ என்ற கரிப்பவுடர் மின்னேற்றமுள்ள இடங்களில் மட்டும் ஒட்டும் . இது வெற்றுத்தாளில் உருண்டு அச்சினைத் தாளில் பதிக்கும்.

எபிதீலிய ரோமக்குமிழ்கள் தலைப்பகுதியில் அதிகம் காணப்படுவதால் தலையில் மட்டும் ரோமமும் அதிகமாகக் காணப்படுகின்றன.

சமையல் குக்கரில் வைட்டன் என்ற செயற்கை ரப்பர் வளையம் வைக்கப்படுகிறது. இது 250 டிகிரி செல்சியஸில்தான் உருகும். ஆனால் நீர் 120 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதித்துவிடும். எனவே இந்த ரப்பர் உருகாது.

சந்திரனுக்கு செல்வதுபோல் விண்மீனுக்கு செல்ல முடியவில்லை. சூரியனுக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரம் பிராக்சிமா செண்டரி. இங்கு  ஒளி  சென்று சேர 43 ஆண்டுகளாகும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ. ராக்கெட்டின் வேகம் வினாடிக்கு 14 கி.மீ. இந்த வேகத்தில் அருகிலுள்ள விண்மீனுக்கு செல்லவே ஒரு லட்சம் ஆண்டுகளாகும்.

17 கருத்துகள்:

 1. சின்ன சின்ன தகவல்கள் அருமை..

  பதிலளிநீக்கு
 2. அறிவியல் ஆனந்தமாகவேஇருந்தது.

  பதிலளிநீக்கு
 3. நன்றி லக்ஷ்மி அம்மா...

  பதிலளிநீக்கு
 4. ஒவ்வொன்றும் பிரமாதம் சார் ! பாராட்டுக்கள் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 5. நல்ல தகவல் உங்கள் உழைப்புக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. நண்பருக்கு வணக்கம் . தங்களின் தகவல்கள் மிக அருமை ...

  ஜெராக்ஸ் இயந்திரம் என்று நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் . அதை நகலெடுக்கும் இயந்திரம் என்று கூறினால் சால சிறந்தது . ஜெராக்ஸ் என்பது ஒரு கருவியின் பெயர் அல்ல . நகலெடுக்கும் இயந்திரத்தை முதலில் தயாரித்த ஒரு நிறுவனத்தின் பெயர் மாத்திரமே ...

  தொடர்ந்து இப்படி தகவல்களுக்காக காத்திருக்கிறோம் ...

  நன்றி

  பதிலளிநீக்கு
 7. இப்படி அறிவியலை ஆனந்தமாகக் கற்றுக்கொடுத்தால் எல்லாப் பிள்ளைகளுக்கும் எளிதில் புரியுமே. மிகவும் நன்றி விச்சு.

  பதிலளிநீக்கு
 8. உங்கள் தகவலுக்கு நன்றி இருதயம்.ஜெராக்ஸ் என்று கூறினால்தான் நமக்கும் உடனே புரிகிறது. கருத்துக்கள் கூறிய திண்டுக்கல் தனபாலன், கீதா , Rathnavel Natarajan, veedu அனைவருக்கும் எனது நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஒரு சாதாரண கண்ணீர்ப்புகைக்கே இத்தனை கெடுதல் என்றால் ஈழத்துப்போரை நினைத்துப் பார்க்கிறேன்.எல்லாச் செய்திகளுக்கும் நன்றி விச்சு !

  பதிலளிநீக்கு
 10. ஈழத்துப்போர் கொடுமையிலும் கொடுமை. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஹேமா, இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 11. அறிவியல் தகவல்கள் சுவாரஸ்யம்
  அறியாத அரிய தகவலக்ளை அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. அறியாத பல விஷய்ங்களை அறிந்து கொண்டேன். நன்றி சகோ

  பதிலளிநீக்கு