சனி, ஜனவரி 14

சேமியா,மைதா,சவ்வரிசி எதிலிருந்து?

       சில பொதுவான விசயங்கள் நமக்குத் தெரியாமலோ அல்லது மறந்துபோயோ இருக்கலாம். அதில் சில விசயங்களின் ஞாபகமூட்டல் இப்பதிவு. 

சேமியாவானது மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகிலிருந்தும் சேமியா தயாரிக்கப்படுகிறது. மைதா மாவு கோதுமையிலிருந்தும், மரவள்ளிக்கிழங்கிலிருந்தும்  தயாரிக்கப்படுகிறது.
            சவ்வரிசியானது மெட்ரோசைலான் சாகு (Matroxylong sagu) என்ற  சவ்வரிசி  பனையின் (Sagi palm) தண்டுப்பகுதி பித்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

மரம் கல்லாவது எப்படி?

   மரம் கல்லாவதை பெட்ரிஃபிகேஷன் (Petrification) என்பார்கள். இது கற்படி உருவமாதல் (Fossilization) வகையாகும். கற்படி உயிர்களில் அசல் பொருட்கள் இருப்பதில்லை. உயிரினத்தின் அசல்பகுதி சிலிகாவால் இடப்பெயற்சி செய்யப்பட்டால் சிலிஸிபிகேஷன் என்றுபெயர். இரும்பு பைரேட்டால் இடப்பெயற்சி செய்யப்பட்டால் அதற்கு பைரைடைஸேஷன் என்றுபெயர். கார்பன் கூட்டுப்பொருளால் இருந்தால் கார்பனைஸேஷன் என்றுபெயர்.