சனி, ஜனவரி 14

நரி

          நம் மனதைப்பற்றிய கலீல் ஜிப்ரானின்   நரி என்றொரு கதையில்... காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது :   "எனக்கு  இன்று  காலை  உணவுக்கு  ஒரு  யானை  கிடைக்க வேண்டும்.' 
         யானையைத்தேடி  மதியம்  வரை அ து அலைந்து  திரிந்தது. ஆனால், மதியம்  தன்  நிழலைப்பார்த்து  நரி  சொன்னது : " எனக்கு ஒரு  எலி  கிடைத்தால் கூட போதும்!'.
      நம்முடைய  மனமும்  இப்படித்தான்.  நமது பலமும்,  பலவீனமும்  ஒரே சமயத்தில்  மனதில்  இடம்பெற  முடியாது. ஒவ்வொரு   சமயத்திலும் ஒவ்வொரு  விதமாக  அவை  வெளிப்படுகிறது.

2 கருத்துகள்:

  1. மாயையின் வலையில் சிக்கிய மனத்தின் எண்ணங்களை சின்னஞ்சிறு கதையின் மூலம் அழகாக விளக்கிவிட்டீர்கள். பாராட்டுகள்..

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீதா.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு