சனி, பிப்ரவரி 25

அறிவியல் ஆனந்தம் 5

கரையான் புற்று எப்படி வலுவாக உள்ளது?
கரையான்கள் கட்டும் கூட்டுக்கு டெர்மிட்டோரியம் அல்லது புற்றுக்கள் என்று பெயர். இதனைக் கட்ட மண், மரத்துண்டு மற்றும் கரையான்களின் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கரையான்களின் உமிழ்நீருடன் கலந்து கெட்டிப்படுத்தப்பட்டு அரண்மனை போன்ற அமைப்புடன் கட்டப்படுகின்றன. இதில் பாலங்கள், கால்வாய்கள், உணவுகிடங்குகள், ராணியின் அறை என பல அடுக்குகளாக கூம்பு வடிவில் கட்டப்படுகின்றன. இவை சிமெண்டால் கட்டியது போன்று மிக வலிமையாய் இருக்கும்.



மல்லிகை பூவில் மணம் எவ்வாறு உருவாகிறது?
மல்லிகைப்பூவில் சுரக்கும் நறுமண எண்ணெய் பொருட்கள்தான் காரணம். இவற்றில் மெத்தைல் ஜாஸ்மோனேட், மெத்தைல் ஆந்த்ரனலேட், இண்டோல் போன்ற வேதிபொருட்கள் உள்ளன.இவை எளிதில் ஆவியாகக் கூடியவை. பூவின் புறத்தோல்களில் இவை பரவியுள்ளன.ஆகையால் காற்றில் மணம் பரவுகிறது. இது இண்டோலாய்டு வகை மணமாகும்.

சயனைடு சாப்பிடுவதால் மனிதன் உடனடியாக இறப்பது ஏன்?
இதில் பொட்டாசியம் சயனைடு (KCN), சோடியம் சயனைடு (NaCN)  ஆகிய நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதனை உண்டவுடன் இரத்த சிவப்பணுவை அடைந்து ஹீமோகுளோபினை அடைகிறது. அதிலுள்ள இரும்பணுக்களோடு இணைவதினால் ஆக்ஸிஜனை இணைக்கும் திறன் துண்டிக்கப்படுகிறது. இதனால் ஆக்ஸிஜன் இல்லாத நிலைமை ஏற்பட்டு மரணம் தழுவுகிறது.

தலைமுடியை வைத்து துப்பு துலக்குவது எப்படி?
தலைமுடியை நுண்ணோக்கியில் வைத்துப் பார்த்தால் அதில் சுருள் சுருளாக வரிகள் தெரியும்.மனிதருக்குள் இந்த சுருள் வேறுபட்டுக் காணப்படும்.சந்தேக நபரின் முடியினையும் குற்றம் நடந்த இடத்தில் கிடைத்த முடியினையும் ஆய்வு செய்தால் குற்றவாளியைக் கண்டறியலாம். மேலும் சயனைடு, ஆர்சனிக் போன்ற விஷங்களை சாப்பிட்டு உயிர் இழந்தவர்களின் தலைமுடியில் விஷம் தங்கிவிடும். இதனை பகுப்பாய்வு செய்து எந்த விஷத்தால் இறப்பு ஏற்பட்டது என்பதனை அறியலாம்.

மனிதன் சூரிய ஒளியில் தானாக உணவு தயாரிக்க முடியுமா?
தாவரங்களுக்குள்ள சிறப்பமைப்பான பச்சையம் , கார்பன் டை ஆக்ஸைடு, சூரிய ஒளி மற்றும் நீர் கொண்டு உணவு(ஸ்டார்ச்) தயாரிக்கும் ஆற்றல் மனிதனுக்கு கிடையாது. செல்லியல் நிகழ்வுகள் பல  வேறுபாட்டினை கொண்டுள்ளது. மனிதனுக்கு உள்ள செல்லியல் அமைப்பு முறை வேறு. சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி மட்டுமே மனிதத்தோல் உற்பத்தி செய்யும்.


கோபப்படும்போது சிலருக்கு கண்கள் சிவப்பது ஏன்?
அட்ரினலின் என்ற ஹார்மோன் அவசர காலத்தில் (சண்டையிடுதல்,கோபப்படுதல், பயப்படுதல், ஓடுதல்)  அதிகளவில் இரத்தத்தில் விடுவிக்கப் படுகின்றது. இதன் காரணமாகநம் உடல் துரிதமாக செயல்படத்துவங்கும். இதயத்துடிப்பின் வீதத்தினை அதிகரிக்கும். இரத்தக்குழாய்கல் சுருங்கி அழுத்தம் அதிகரிக்கும். இதனால் காதுமடல், கண், மூக்கு நுனி, முகப்பரு அனைத்தும் சிவப்பேறி காணப்படும். 

19 கருத்துகள்:

  1. இவ்வளவு விஷயம் இருக்க உண்மையா தெரியாதுங்க . தொடருங்க

    பதிலளிநீக்கு
  2. விக்கிபீடியா போன்று படங்களுடன் தகவலை தந்துள்ளீர்கள் நன்றி நண்பரே

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காட்ட ( Blog Archive)

    பதிலளிநீக்கு
  3. விஞ்ஞானம் என்பது நமது வாழ்வில் ஒன்றர கலந்து விட்ட விஷயம்.பூட்டப்பட்ட அறையில் கண்ணாடிக்குடுவையும்,பிப்பட்டும்,ப்யூரட்டும் வைத்து செய்யப்படுகிற வேலைகள் மட்டுமே விஞ்ஞானம் அல்ல,என்பதை விலங்குகளும்,தாவரங்களும் கூட நிரூபிக்கின்றன.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான தகவல்கள். அழகாக தந்துள்ளீர்கள். நன்றி. தொடரவும்.

    பதிலளிநீக்கு
  5. உண்மையில் அறிவியல் ஆனந்தம்தான் விச்சு.நன்றி !

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு அறிவியல் விளக்கமும் மிக அருமை சார் !

    பதிலளிநீக்கு
  7. அறிந்துக்கொள்ள நிறைய விஷயங்கள் உங்கள் பதிவில் கொட்டிக்கிடக்கிறது... வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. தலைமுடியில் விஷம் தங்கும் விவரத்தை இப்போதுதான் அறிகிறேன். அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்மையில் வியக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி விச்சு.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தகவல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  10. அறிய வேண்டிய தகவல்கள்.கடைசித்தவலில் விஜயகாந்த படம் போட்டு இருப்பது சிரிப்பினை வரவழைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா.விஜயகாந்த்'தான் அந்தத் தகவலுக்கு பொருத்தமான ஆள்.

      நீக்கு
  11. புற்று பற்றிய செய்தி பிரமிக்க வைக்கிறது. ஒரு சின்னஞ்சிறு உயிரினம் எவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் ஒரு அரண்மனையைப் போல தன் மனையை அமைத்துக் கொள்கிறது பாருங்கள்!!

    அருமை அருமை!!

    பதிலளிநீக்கு
  12. நல்ல தகவல்கள் தான் விச்சு....இன்னும் நிறைய அறிவியல் ஆனந்தம் பகுதிகளை எழுதுங்கள். நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்....
    நன்றி விச்சு....

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. அறிந்திராத விஷயம் நன்றி.

    பதிலளிநீக்கு