செவ்வாய், மார்ச் 6

கல்விச்சந்தை

     சமீபத்தில் ஆசிரியத் தேர்வு வாரியத்தினால் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. மார்ச் 16ம் தேதி விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என்றும், மே27 அன்று தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும். இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த நாளே அதற்கான பயிற்சி வழங்கப்படுவதாக பல அறிவிப்புகள் வெளிவந்தன.


எப்படியும் பணத்தை இவங்ககிட்ட கொடுத்திடனும்

        மதுரையில் பிரபல பயிற்சி நிறுவனம் ஒன்று பயிற்சிக்கான சேர்க்கைக்கு மட்டும் ஒருநாளை அறிவித்திருந்தது. அன்று அங்கு குவிந்த கூட்டம் திருவிழாவிற்கு வந்த கூட்டம் போல் இருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கூட்டம் குவிந்தது. அங்கு அட்மிஷன் வாங்கியதையே ஏதோ வேலை வாங்கிவிட்டது போல் சந்தோஷத்தில் திளைத்தனர். அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனி இடங்களில் அட்மிஷன்(அவ்வளவு கூட்டம்).  இதற்கான கட்டணம் எந்தப்பாடமாக இருந்தாலும் ரூ10000/. தமிழுக்கு மட்டுமே சுமார் 400பேர் வந்திருப்பர். கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கட்டியதற்கான ரசீது எதுவும் கிடையாது. ஒரு அட்டையில் எழுதிக் கொடுக்கின்றனர்.இங்கு வருபவர்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் வேலை செய்பவர்களாக, வேறு தனியார் நிறுவனங்களிலோ, குடும்பத் தலைவியாகவோ அல்லது வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள். எப்படியாவது வேலை வாங்கிவிடவேண்டும் என்ற உந்துதலினால்தான் பலர் இங்கு வந்து சேர்கின்றனர். பணத்தினை கஷ்டப்பட்டு கட்டுகின்றனர். எல்லோருக்கும் படிக்கும் திறமை உண்டு. ஆனால் பயிற்சிக்கு சென்றால் நம் பாடத்தினைப் படிக்கின்ற சக நண்பர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளலாம். பாடத்திட்டத்திற்கேற்ப அனைத்து பாடத்திற்கும் நகல்கள் கிடைக்கும். ஆனால் இதனைச் சாக்காக வைத்து பயிற்சி என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிப்பவர்களும் இருக்கின்றனர். 

பயிற்சிக்கு அட்மிஷன் பெற வந்தவர்கள்

பணத்தை கொடுத்தாச்சு... கொஞ்சம் ரிலாக்ஸ்

டுடே ஜெனரல் நாலெட்ஜ் :
 1. கொசுவே இல்லாத நாடு -  பிரான்ஸ்
2.  காகம் இல்லாத நாடு - இங்கிலாந்து
3. கரண்டே இல்லாத நாடு - .... அட இதுக்கு இவ்வளவு யோசிக்கலாமா!!!       
                                                           தமிழ்நாடு


16 கருத்துகள்:

  1. பயிற்சி மையங்கள் ஜாக்கிரதை ...

    ????????

    பதிலளிநீக்கு
  2. டுடே ஜெனரல் நாலெட்ஜ் : சூப்பர் விச்சு.நகைச்சுவையோடு ஆதங்கம் !

    பதிலளிநீக்கு
  3. நல்லாயிருக்கு,பவர்கட் ஆனால் உங்க ப்ளாக்கிற்கு வந்து எப்படி லைட் ஆன் செய்ய முடியும்? லொல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐடியா!கரண்ட் இருக்கும்போதே ஆன் செய்து வச்சுக்கோங்க...

      நீக்கு
  4. இதற்கான கட்டணம் எந்தப்பாடமாக இருந்தாலும் ரூ10000/. தமிழுக்கு மட்டுமே சுமார் 400பேர் வந்திருப்பர். கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். பணம் கட்டியதற்கான ரசீது எதுவும் //
    என்ன ஒரு சுரண்டல் ..

    பதிலளிநீக்கு
  5. 3. கரண்டே இல்லாத நாடு - .... அட இதுக்கு இவ்வளவு யோசிக்கலாமா!!!
    தமிழ்நாடு

    வெளிச்சம் போட்டு தமிழகத்தை ஒளிர வைத்திருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  6. Email id இல் பதிந்திருக்கிறேன். Followers Widget இல் பதிந்திருக்கிறேன். அடுத்து பதிவு எழுதும்போது இந்த பெட்டி மறைந்த விபரத்தையும் எழுதி நண்பர்களை திரும்ப பதியும்படி கேட்டுக் கொள்ளுங்கள். எனக்கு Dash Board ஒரு வாரமாக வரவில்லை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியா. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  7. மிக சரியே! அருமை அண்ணா! பல போட்டித் தேர்வுகளுக்கு இந்த மாதிரி பயிற்சி அளிக்கப்படுவதாக கூறி நிறைய சுரண்டல்கள் நடக்கின்றன! மேலும் இந்த மாதிரி பயிற்சி எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்கிற மாயை உருவாகி வருகிறது! தற்போது அதிக வேலைவாய்ப்புகளை அளித்து வரும் வங்கித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புதிய புதிய சுரண்டல் நிலையங்கள் அதிகமாகிக்கொண்டே போகிறது! இத்தனைக்கும் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் நமது பள்ளிப்பாடங்களே!!!!
    அருமையான பகிர்வு அண்ணா!
    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு