சனி, மார்ச் 10

மின்சார சிக்கனம்

தமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினையாக இருப்பது மின்சாரம். சம்சாரத்தைக்கூட ஒருவழியாக சமாளித்துவிடலாம். ஆனால் மின்சாரமில்லாமல் இன்று தமிழகம் படும்பாடு சொல்லிமாளாது.  பெண்கள் இதனையே ஒரு சாக்காக வைத்து பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினால் தங்கள் உடம்பினை "சிக்"கென வைத்துக்கொள்ளலாம். இதனால் பலவிதமான நோய்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் உதவும். இதனையே நமக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம் (ஆதங்கத்தில்தான்).


1. மின்சாரக் கட்டணம் மிச்சம். எப்படி?


தமிழகம் வாருங்கள்!!
2. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினைத் திரும்பவும் மீட்டெடுக்கலாம். அம்மி, உரல், ஆட்டுரல் போன்றவற்றினைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் தங்கள் உடம்பினை கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். நோய்நொடிகள் நெருங்கவிடாமல் செய்ய இந்த உடற்பயிற்சிகள் உதவும். வேலையும் செய்தமாதிரி ஆச்சு. உடம்பையும் செலவில்லாமல் "சிக்"கென வைத்திருக்கலாம். கிரைண்டர், மிக்ஸி பயன்படுத்தாததால் கரண்ட் பில் மிச்சம்தானே!!!


3. விறகு அடுப்பினைப் பயன்படுத்தலாம்.

4. மண்பானையைப் பயன்படுத்தலாம்.

5. மின்சாரமில்லாமல் வாழப்பழகிக்கொள்வதால் நமக்கு நேரம், செலவு மிச்சம். எப்படியென்றால்... தொலைக்காட்சி பார்ப்பதினை வேறு வழியில்லாமல் தவிர்ப்போம். இதனால் நேரம் மிச்சம். 

6. நாம் கூடிப்பேசுவதற்கு இது உதவும். இதனால் உறவுமுறை வளரும்.

7. தொலைக்காட்சியில் நாடகம் தொடர்ச்சியாகப் பார்ப்பதனால் மனச்சிதைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இனி அது தவிர்க்கப்படலாம்.


8. சூரிய ஒளியின் பயனை அறிந்து அதனைப் பயன்படுத்தலாம்.

9. காற்றாலையின் பயனை அறிந்து கொள்ளலாம்.
10. மாணவர்கள் மதிப்பெண் குறைந்தால் பெற்றோரிடம் இதனை ஒரு காரணமாக கூறிக்கொள்ளலாம்.


11.பயன்படுத்தப்படாத பல்புகளைக்கொண்டு அழகான இயற்கை காட்சிகளை உருவாக்கி நமது படைப்பாற்றல் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.
12. வீட்டு விலங்குகள் வைத்திருப்போர் அதனைப் பயன்படுத்தி பயன்படாத பல்புகளுடன் விளையாடப் பழக்கப்படுத்தலாம்.


 13. இரவில் நிலவின் அழகினை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அது உங்கள் மனதுக்கு நல்லது.


14. அந்தக்காலத்தில் நிலாச்சோறு என்று கொண்டாடுவார்கள். அதுபோன்று நாமும் கரண்ட் இல்லாத இரவில் எல்லோரும் அவரவர் வீட்டில் உள்ள உணவினைக் கொண்டு வந்து உண்டு நிலாச்சோறு பழக்கத்தினை புதுப்பிக்கலாம். அண்டை அயலாருடன் நம்து பழக்கம் வளரும்.

இப்படிக்கு...

நன்றி..
     விக்கியின் அகட விகடங்கள்!  மற்றும் கூகுள் தேடலில் கிடைத்த படங்கள்.

டுடே ஜிகே : நமது ஊருக்கு கரண்ட் எப்போது வரும்.
அ) எனக்கு தெரியாது
ஆ) அவனுக்கும் தெரியாது
இ) EB க்கும் தெரியாது
ஈ)யாருக்கும் தெரியாது