வியாழன், மார்ச் 15

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)

       நமது நாட்டில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் 1 முதல் 8 வரை பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்தது. CTET (Central Teacher Eligibility Test)என்ற தேர்வினை மத்திய செகண்டரி கல்வி போர்டு நடத்தி வருகிறது. இதில் நவோதயா, கேந்திரிய வித்யாலயா, மத்திய அரசுப்பள்ளிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் எழுத வேண்டும். தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET(Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


      இந்தத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல் தாளினை 1 முதல் 5 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது ஆசிரியப் பயிற்சி முடித்தவர்கள், இரண்டாம் தாளினை 6 முதல் 8 வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களும் அதாவது இளங்கலைப் பட்டப் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் எழுத வேண்டும். இரண்டிலும் தகுதி பெற விரும்புபவர்கள் இரண்டு தாளினையும் எழுதலாம். இறுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களும் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வு பெற 60% மதிப்பெண் (90 மதிப்பெண்) பெற வேண்டும்.தேர்வுச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாகும். வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் 4 பலவுள் தெரிவு முறையில் இருக்கும்.

தேர்வு முறை :     தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப்பாடங்கள் தவிர).நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. தேர்வு நேரம் 1.30 மணி நேரம்.முதல் தாளானது (12 TET 01) 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை (6 முதல் 11 வயது), மொழி I (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,உருது), மொழி II (ஆங்கிலம் - இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிஹென்சன், எலிஜிபிலிட்டீஸ்) கணிதம், சுற்றுச்சூழல் கல்வி - (இதில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், கற்பிக்கும் முறை) ஆகியவற்றில் 30 கேள்விகள் வீதம் 150 வினாக்கள் இடம்பெறும். மேலும் செகண்டரி நிலை வரை தொடர்புடைய வினாக்களும் கேட்க வாய்ப்புள்ளது.
      
              இரண்டாம் தாளானது (12 TET 02) 6 முதல் 8 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு குழந்தை வளர்ப்பு மற்றும் கற்பிக்கும் முறை (11 முதல் 14 வயது) மொழி I (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,உருது), மொழி II (ஆங்கிலம் - இதில் அடிப்படைகள், கம்யூனிகேஷன், காம்ப்ரிஹென்சன், எலிஜிபிலிட்டீஸ்) இந்த 3 பிரிவும் அனைவருக்கும் பொதுவானது. இதிலிருந்து தலா 30 வினாக்களும், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு இவற்றில் 60 வினாக்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அதில் 60 வினாக்களும் மற்ற பாட ஆசிரியர்கள் இதில் (கணிதம்-அறிவியல் அல்லது சமூக அறிவியல்) ஏதாவது ஒன்றினைத் தெரிவு செய்ய வேண்டும்.மேலும் செகண்டரி நிலை வரை தொடர்புடைய வினாக்களும் கேட்க வாய்ப்புள்ளது.

தேர்வு நாள் : ஜூன் 3. காலை முதல் தாள் ( 10 TO 11.30 AM), மதியம் இரண்டாம் தாள் (2.00 TO 3.30 PM). மொத்தம் 66 மையங்கள். விண்ணப்பங்கள் மார்ச் 22 தொடங்கி ஏப்பிரல் 4 வரை வழங்கப்படும்.விண்ணப்பம் விலை ரூ 50/ மட்டும்.தேர்வு கட்டணம் ரூ 500/. தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 250/. இரண்டு தாள் எழுதினாலும் கட்டணம் ஒன்றுதான். பாரத் ஸ்டேட் வங்கியில் செலானாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும்.மேலதிகத் தகவலுக்கு இங்கு செல்லவும்.


ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் இங்கே கிளிக் செய்யவும்.


  

10 கருத்துகள்:

  1. நல்ல உபயோகமான தகவல்களை பகிர்வது பாராட்டத்தக்கது.நிறைய பேர் பயனடைவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல் நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிகவும் பயனுள்ள பதிவுங்க, விச்சு.

    நன்றியும், பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவுகள் கொடுக்கிறீர்கள் விச்சு !

    பதிலளிநீக்கு
  5. ennudaiya application number 0775230 aanal trb website poy type senja number incorrect nu varuthu , innaikku chennaikku poy trb ya partha thuli kuda mariyathai tharamal pesuginrar ennai ponru 7 perum vanthirunthanar ,enna seyvathu enru puriyavillai ennal ippothu TET exam ezhutha mudiyathu .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அப்ளிகேசனை மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள். அதிலேதும் விபரங்கள் விடுபட்டுள்ளதா? என்றும் சரிபார்க்கவும்.

      நீக்கு
    2. கல்வி அதிகாரிகள் பல மாவட்டங்களுக்கு விசிட் வருகிறார்கள். அவர்களிடம் உங்கள் அப்ளிகேசன் காபி மற்றும் சலான், acknowledgment போன்றவற்றின் நகலைக் காண்பித்து விபரம் கேட்கவும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்கும். கல்வி அதிகாரிகள் விசிட் வரும் மாவட்டம் மற்றும் நேரம் அறிந்துகொள்ள இந்த லிங்க் கிளிக் பண்ணவும். http://trb.tn.nic.in/TET2012/04072012/SpecialProgram.pdf (அல்லது) http://trb.tn.nic.in/TET2012/04072012/msg.htm

      நீக்கு