திங்கள், ஏப்ரல் 16

மழலையின் மனதில்



உங்களுக்கென்ன? ஐந்து வயது வரை
அம்மாவுடன் உறவாடிவிட்டு
நண்பர்களுடன் விளையாடிவிட்டு
ஜாலியாக பள்ளிக்குச் சென்றீர்கள்!
வேற்று மொழிகூட
எட்டு வயதானபின்தான்!

இப்போது...
கர்ப்பத்திலேயே அட்மிசன்!!
எல் கே ஜியில் வளைந்த முதுகு
எண்பது வயதிலும் நிமிரவே இல்லை!
உலகை நிமிர்ந்து பார்க்கும் முன்
ஓராயிரம் வார்த்தைகள்!

ஓடியாடும் எனக்கு
ஓய்வு பெற்றவர் 
பாடங்களைத் தீர்மானிக்கிறார்!
புத்தகத்திற்கும் உயிருண்டு...
ஊமைப்பார்வையில் என்னைப் 
பார்த்து பரிகாசிக்கிறது!
பாவமென்றா? பைத்தியமென்றா?
தெரியவில்லை!

இப்போதுள்ள குழந்தைகள்
மிகச்சிறந்த அறிவாளிகளாம்!
அதனால் நாங்கள்
இழந்தவை எங்களுக்கு
 மட்டுமே தெரியும்!

வகுப்பறைகள் இன்று 
கல்லறைகளாகவே
ஏனெனில் அடக்கம்தான் 
சிறந்ததாம்!!
புத்தகங்கள் கிழிபடும்போது
மனமும் கிழிகின்றது!

நான் என்னவாக வேண்டுமென்று
என்னைத் தவிர
எல்லோருமே தீர்மானிக்கிறார்கள்!
உலுத்துப்போன விதைகளாகவே
எங்களை விதைக்கிறார்கள்! 
அது முளைக்கவில்லையென
வருத்தமும் கொள்கிறார்கள்!

நேரே உட்கார்.. கையைக் கட்டு...
வரிசையில் போ... 
சொன்னதை மட்டும் சொல்...
எழுதுவதை எழுது...
கனவிலும் நினைக்கவில்லை
கட்டளைகளே வாழ்க்கையாய்!

வலது கையில் கொடு...
தண்ணீர் சிந்தாதே...
ஆடையினை அழுக்காக்காதே...
ஆடிப்பாடாதே...
அடக்கமாக நடந்து கொள்...
இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகாம்!!

வாசித்தல் சிறந்தது
வாசிக்க கொடுக்கும் புத்தகம் 
சிறந்ததா?
பழங்கணக்கும் பெளதிகமும்
பழங்கதையாக மட்டுமே!

நான் படிக்க
பெற்றோருக்கு தேர்வாம்!
நாமகளும் நாணுகிறாள்!
நல்ல வேளை
விலங்குகளுக்கு வகுப்புகளில்லை!
இல்லையெனில்
அதுவும் என்னைப்போல்
படித்த முட்டாளாய்!!!

நன்றி: கூகுள் தேடலில் கிடைத்த படங்கள்


21 கருத்துகள்:

  1. நிதர்சனத்தைச் சொல்லுகிற கவிதை. நன்று.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா16 ஏப்ரல், 2012

    இல்லையெனில்
    அதுவும் என்னைப்போல்
    படித்த முட்டாளாய்!!!//

    முத்தாய்ப்பு...

    பதிலளிநீக்கு
  3. பாப்பாக்கள் பார்வையிலிருந்து ஒரு கவிதை. சூப்பரா இருந்துச்சு சகோ. வாய் திறந்து அந்த குட்டிகள் சொல்லாததை உங்க கவிதை சொல்லிடுச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகள் சார்பாக எழுதிவிட்டோம். தங்கள் வரவுக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  4. நான் என்னவாக வேண்டுமென்று
    என்னைத் தவிர
    எல்லோருமே தீர்மானிக்கிறார்கள்!

    அருமை. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. arumai... vaalththukkalஇன்றைய கல்வி முறையை தோல் உறித்து காட்டியுள்ளீர்கள்…. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. //வகுப்பறைகள் இன்று
    கல்லறைகளாகவே
    ஏனெனில் அடக்கம்தான்
    சிறந்ததாம்!!//

    ;))))) அருமையான வரிகள்.

    //புத்தகங்கள் கிழிபடும்போது
    மனமும் கிழிகின்றது!//

    ”புத்தகங்களே! தயவுசெய்து குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்”

    என்று ஒரு பிரபல கவிஞர் சொன்னது நினைவுக்கு வந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  7. ஒரு ஆசிரியராய் குழந்தைகளைப் படித்திருக்கிறீர்கள் விச்சு.இன்றைய குழந்தைகள் உண்மையில் பாவப்பட்டவர்கள்.நாங்கள் அளைந்த புழுதியெங்கே.இவர்களெங்கே !

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி இராம்குமார்.

      நீக்கு
  9. //ஓடியாடும் எனக்கு
    ஓய்வு பெற்றவர்
    பாடங்களைத் தீர்மானிக்கிறார்!//

    குழந்தையின் மனதைக் காட்டும் அற்புத வரிகள் விச்சு.

    உங்களின் இந்த படைப்பிலிருந்து ஒரு தகப்பனாய் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை நண்பரே

    பதிலளிநீக்கு
  11. கல்வி எனும் பெயரில் சுரண்டும் பலருக்கு சரியான சவுக்கடி வரிகள் அருமை .

    பதிலளிநீக்கு
  12. புத்தகங்கள் பிள்ளகளை கிழித்து விடுவதில்லை.பாடமுறைகளே பிள்ளைகளை இந்த பாடாய்ப்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதை

    பதிலளிநீக்கு