ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
- நேரடிக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்க உதவுவதாக அமைந்திருத்தல்.
- எதிர்மறைக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக்கற்றது, வேறொரு செயலைக் கற்க தடையாக அமைந்திருத்தல்.
- சூன்ய கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்பதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலிருத்தல்.
- இயல்பூக்க கொள்கையை கூறியவர்கள் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
- ஒற்றைக்காரணி - ஆல்பிரட் பீனே
- இரட்டைக்காரணி - ஸ்பியர்மேன்
- குழுக்காரணி - தர்ஸ்டன்
- நுண்ணறிவு வளர்ச்சி - H.E.கேரட்
- நுண்ணறிவு கட்டமைப்பு - கில்போர்டு
- பல்காரணி கோட்பாடு - தார்ண்டைக்
- அணுகுதல்-அணுகுதல் மனப்போராட்டம் - இரண்டு நேர் ஊக்கிகள் பங்குபெறுகின்றன. இரண்டு நல்ல சம இலக்குகளில் எதை அடைய முயற்சிப்பது என்பதில் போராட்டம்.
- அணுகுதல்-விலகுதல் மனப்போராட்டம் -நேரெதிர் ஊக்கிகள் பங்குபெறுகின்றன.விருப்பமிலா நேர் இலக்கு - விடமுடியா எதிர் இலக்கு இவற்றில் எதைத் தெர்ந்தெடுப்பது என்பதில் ஏற்படும் மனப்போராட்டம்.
- விலகுதல் - விலகுதல் மனப்போராட்டம் - இரண்டு எதிர் ஊக்கிகள் பங்குபெறுகின்றன. இரண்டு எதிர் ஊக்கிகளில் எதைமுதலில் தவிர்ப்பது என்பதில் போராட்டம்.
- தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - தஞ்சாவூர் 1981
- திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - வேலூர் 2002
- தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு- சென்னை 2003
- சென்னை பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - சென்னை 1857
- அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு -கொடைக்கானல் 1984
- பாரதியார் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு- கோயமுத்தூர் 1982
- மரியா மாண்டிசோரி - இத்தாலி, புலன் உணர்வுக்கல்வி, 1907ல் குழந்தைகள் இல்லம்,நூல்கள் - discovery of childhood, childrens house, the secret of education, child training, Reconstruction in education
- புரோபெல் - ஜெர்மனி, 1837ல் கிண்டர்கார்டன் பள்ளியை ஆரம்பித்தார், நூல்கள் - Education by development, Pedagogies of Kindergarden, The Education of Man, Mother plays and Nursery Rhymes
- வாருங்கள் நாம் குழந்தைகளுக்காக வாழ்வோம் என்பது புரோபலின் கூற்று
- புரோபெல் விளையாட்டு வழிக்கற்றலில் பயன்படுத்தியவை பரிசு மற்றும் தொழில் வேலைகள்
- தாகூர்- கல்கத்தா, கீதாஞ்சலி நூலுக்காக 1913 ல் நோபல் பரிசு பெற்றார்., குருதேவர்,1901ல் ஆசிரமப்பள்ளியாக இருந்தது 1921ல் விஸ்வபாரதி பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாறியது, நூல் - எனது பள்ளி.
- எரிந்துகொண்டிருக்கும் விளக்கே மற்றொரு விளக்கை ஏற்ற முடியும் - தாகூர் கூற்று
- தாகூர் - கீழ்த்திசையின் ரூஸோ
- கல்கத்தா பல்கலைக்கழக் குழு - 1919
- தேசிய கல்விக்கொள்கை - 1986
- சார்ஜண்ட் அறிக்கை - 1944
- உட்ஸ் குழு - 1854
நல்ல தகவல் நண்பா
பதிலளிநீக்குஉபயோகமான தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்கு