கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
ஏழு தன்னதிகார கல்லூரிகள் மற்றும் மூன்று பல்கலைக்கழகங்கள் ஆயிஷாவினை பாடமாக வைத்துள்ளன. ஆயிஷா கதையினை வாசிக்கும்போது ஏற்பட்ட அதே உணர்வு படம் பார்க்கும்போதும் ஏற்படும் விதத்தில் அருமையாக குறும்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். அனைவரின் பாராட்டினையும் பெற்ற ஆயிஷா குறும்படத்தினைத் தயவுசெய்து பொறுமையாகப் பாருங்கள். உங்கள் விமர்சனத்தினைப் பகிருங்கள். ஆயிஷா கதையினை தமிழில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ஆங்கிலத்தில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும். ஆயிஷா நடராஜனின் அற்புதமான சொற்பொழிவினை கேட்க இங்கு கிளிக் செய்யவும்.
அருமையான கதை மற்றும் காணொளி
பதிலளிநீக்குப்திவாக்கித் தந்தமைக்கு ம்னமார்ந்த நன்றி
ஆயிஷாக்களை இன்றைய கல்வி முறை காயடித்து காயப்படுத்தி விடுகிறது.அடையாளமற்றும் போகச்செய்து விடுகிறது.
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை (செய்தி அடக்கம்) சிறந்த வீடியோ. மிக்க நன்றி. வாழ்த்துகள்
பதிலளிநீக்குPlease visit
பதிலளிநீக்குhttp://nidurseasons.blogspot.in/2012/04/blog-post_30.html
ஆயிஷா
வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் காணொளியை பார்க்கிறேன், நன்றி ..!
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு ..ம்னம் நிறைந்த நன்றி
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
பதிலளிநீக்குஆயிஷா முன்பே படித்திருக்கிறேன். கண்ணீருடன்தான் முடித்தேன். காணொளி இன்னும் காணவில்லை. மனத்தை அதற்குமுன் கொஞ்சம் தயார்படுத்திக்கொண்டுதான் பார்க்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி விச்சு.
பதிலளிநீக்குவாங்க கீதா மேடம்... கதையினைப்பற்றி சரியாக கணித்து வைத்துள்ளீர்கள்.
நீக்குஇந்த கதை முன்பே வாசித்திருக்கிறேன்,காணொளி இப்ப தான் பார்க்க போகிறேன்.பகிர்விற்கு நன்றி.மனதை உலுக்கி எடுத்த கதை.
பதிலளிநீக்குஉண்மைதான் Asiya Omar... காணொளியினைப் பாருங்கள். வருகைக்கு நன்றி.
நீக்குஅருமையான கதை மற்றும் காணொளி
பதிலளிநீக்குப்திவாக்கித் தந்தமைக்கு ம்னமார்ந்த நன்ற