திங்கள், ஏப்ரல் 23

ஆசிரியர் தகுதி தேர்வு (TET)


ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
 • NAPE என்பது என்ன?  தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978
 • அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990
 • Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்
 • சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
 • தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970
 • தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978
 • 1982ல் எம் ஜி இராமச்சந்திரன் கொண்டு வந்த முக்கியத் திட்டம் -முதலமைச்சர் சத்துணவுத் திட்டம்
 • 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக்கல்வி அடிப்படை உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பிரிவு - பிரிவு 21 -ஏ
 • புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் - மால்ட்ஸ் மேன்
 • “தொடக்கக் கல்வி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும்” கூறியவர் - பேராசிரியர் அமர்த்தியா சென்
 • கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன்
 • “இந்தியாவில் இந்தியக் கல்வி இல்லை” கூறியவர் - டாக்டர் டி வெங்கிடசுப்பிரமணியம்
 • ”எரியும் விளக்கே மற்றொரு விளக்கை எரிய உதவும் “ - தாகூர்
 • காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி
 • முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்- ஆசபல், அண்டர்வுட்
 • பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர்
 • கற்பித்தல் இயந்திரத்தளத்தின் முன்னோடி - பி எப் ஸ்கின்னர்
 • புறத்தேற்று நுண்முறை என்பது - ஊடுகதிர் நிழற்படம் மூலம்
 • “வகுப்பறை பணியறை போல் இருக்க வேண்டும்” கூறியவர் - ஜான்டூயி
 • மேலாண்மை பற்றி கூறுபவர்- ஆல்பர்ஸ்
 • வேக்ஸ்லர் என்பவர் உருவாக்கிய நுண்ணறிவுச் சோதனை எதனைக்கணக்கிடப் பயன்படுகிறது - விலக்கல்
 • ஜான்டூயி கொள்கை - பயனளவைக் கொள்கை
 • பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல்
 • அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்- டோல்மன்
 • நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக்
 • அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன்
 • "Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்- விப்பிள்
 • L.O.E என்பது - வாழ்க்கை மையக் கல்வி
 • கற்றலைப் பாதிக்கும் முக்கியமான காரணி - மறத்தல்
 • வயது வந்தோர் கல்வித்திட்டம் என்பது - 15 வயது முதல் 35 வயதுவரை
 • தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட்
 • இந்தியாவில் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டம் - கோட்டயம்
 • +2 நிலையிலேயே மாணவர்களுக்கு IAS, IPSபயிற்சி கொடுக்க வேண்டும் என்றவர் - L.K.ஜா
 • நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ
 • நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில்
 • "அக்னிச் சிறகுகள்" என்ற நூலின் ஆசிரியர் - விஞ்ஞானி அப்துல் கலாம்
 • "போரும் அமைதியும்" என்ற நூலை எழுதியவர் - டால்ஸ்டாய்
 • "மை ஸ்ட்ரகில்ஸ்"  என்ற நூலை எழுதியவர் -  ஈ கே நாயனார்
 • "ஞானரதம்"  என்ற நூலை எழுதியவர் - பாரதியார்.
 • "குருவின் காலடியில்"  என்ற நூலை எழுதியவர் -  ஜே கிருஷ்ணமூர்த்தி
 • ஜெ. எச்.பெஸ்டாலஜி  என்ற நூலை எழுதியவர் - "லியோனார்டும் கெர்டரூடும்"
 • “Adul Learning"  என்ற நூலை எழுதியவர் -  டாக்டர் ஆர் ஜெயகோபால்
 • "நாளைய பள்ளிகள்"  என்ற நூலை எழுதியவர் - ஜான்டூயி
 • " A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - பெஸ்டாலஜி
 • "ஸ்டைர்”  என்ற நூலை எழுதியவர் - விக்டர் ஹீயூகோ
 • புள்ளியியலின் தந்தை - சர் ரொனால்டு ஏ பிஸ்ஸர்
 • உதவிக்கல்வி அலுவலர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு, நேரடி நியமனம்
 • ஆசிரியர் நியமனத்தில் பணி வரன் எப்போது செய்யப்படும் - 1 வருடத்தில்
 • ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் பருவம் என்பது - 2 வருடத்தில்
 • ஆசிரியர் நியமனத்தில் தேர்வு நிலை எப்போது செய்யப்படும் - 10 வருடத்தில்
 • ஆசிரியர் பணியில் சிறப்பு தேர்வு நிலை என்பது - 20 ஆண்டுகள்
 • விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் பள்ளி ஆசிரியர் - திரு அய்யாதுரை சாலமன்
 • உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன்
 • ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர்
 • சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி
 • ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ
 • வால்டாரப் பள்ளியை தோற்றுவித்தவர் - ருடால்ப் ஸ்டெனர்
 • பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி
 • சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17
 • SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461
 • கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை
 • அரிக்கா மேடு எம்மாநிலத்தில் உள்ளது - புதுச்சேரி
 • தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை
 • கல்லறை வனம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்
 • குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு

3 கருத்துகள்:

 1. பெயரில்லா23 ஏப்ரல், 2012

  போட்டித்தேர்வுக்கு தேவையான தகவல்கள். அனைவருமே தெ​ரிந்து கொள்ளலாம் நன்றி.

  நாகு
  www.tngovernmentjobs.in
  www.nagaindian.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. நேரத்திற்கு ஏற்ற சிறந்த இடுகை பாராட்டுகள் தொடர்க....

  பதிலளிநீக்கு
 3. அருமையான பயனுள்ள தகவகள் நண்பரே நன்றிகள் பல

  பதிலளிநீக்கு