வெள்ளி, மே 11

வைத்தியலிங்கபுரம்

இது அப்படி ஒன்றும் பிரபலமான ஊர் இல்லை. நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வருங்காலத்தில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.  வைத்தியலிங்கபுரம் ஒரு சிறிய கிராமம் . இந்த ஊர் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது. வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் அமைந்துள்ளதால் வைத்தியநாதபுரம் என்ற பெயர்தான் ஆரம்பத்தில் இருந்தது. காலப்போக்கில் வைத்தியலிங்கபுரம் என்றாயிற்று. வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில் ஒரு சிறிய ரயில்வே ஸ்டேசன் இருந்தது. அதில்தான் அதிகமான போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் அது பல வருடங்களுக்கு முன்பே அகற்றப்பட்டது. 3 கி.மீ தூரத்திலேயே திருவில்லிபுத்தூர் ரயில்வே ஸ்டேசன் உள்ளதால் இந்த நடவடிக்கை எனக்கூறினர். அதன் போட்டோ கிடைக்கவில்லை. 

vichu

விவசாயம் முக்கியத்தொழில் என்றாலும் தற்போது ஸ்பின்னிங் மில் ஒன்றையே நம்பியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது பீடித்துள்ள ரியல் எஸ்டேட் பிசினசால் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதன் பாதிப்பு இங்கும் உள்ளது. ஆரம்பத்தில் இங்கு அதிகமாக விவசாயத்திற்காக மாடுகள் வளர்த்தனர். தற்போது மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மாட்டுப்பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு விடுவர். அது இங்கு ரொம்ப பிரசித்தம். தற்போது ஜல்லிக்கட்டு என்ன என்பதே இன்றைய தலைமுறைக்குத் தெரியவில்லை.
vichu




வைத்தியலிங்கபுரத்தில் சித்திரைப்பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தம். சமீபத்தில் சித்திரைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். முதல்நாளில் அம்மன்வீதிஉலா நடைபெறும். இரண்டாவது நாள் கரகம் கொண்டு வரப்படும். கரகம் வரும்போது நிறைய பக்தர்கள் உருண்டு கொடுத்தல் நிறைவேற்றுவர். கரகத்தின்பின் தங்கள் வேண்டுதல் நிறைவேற உருவம் செய்து காணிக்கை செலுத்துவர்.

vichu


மூன்றாவது நாள் காலையில் பெண்கள் பொங்கல் வைப்பர். அது கடவுளுக்குப் படைக்கப்படும். மொட்டை போடுதல், மாவிலக்கு எடுத்தல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். என் மகள் சஹானா போட்ட அழகான கோலம்.




அன்று மாலை தீச்சட்டி எடுத்தல், கவுறு குத்து, முளைப்பாரி எடுத்தல் போன்ற பல வேண்டுதல்களைப் பக்தர்கள் அம்மனுக்கு நிறைவேற்றுவர்.




alaiyallasunami


பொங்கல் கொண்டாடிய மறுநாள் முறைப்பெண்கள் மஞ்சள் தண்ணீரை மாமன் மேல் ஊற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்(என்மேல் யாரும் ஊற்றவில்லை...கொஞ்சம் வருத்தம்தான்) இந்த நிகழ்ச்சி மிகவும் குதூகலமாக இருக்கும். 

ஒவ்வொருநாள் இரவும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

alaiyallasunami

இந்த பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவதால் உறவுமுறைகள் பலப்படும். வெளியூரில் இருக்கும் நபர்களும் பொங்கல் தினத்தன்று சொந்த ஊருக்கு வருவதால் பிறந்த ஊரின் மகத்துவத்தை உணரலாம். தமிழ்நாட்டின் பாரம்பரியங்களில் இது போன்ற விழாக்களும் முக்கியமானது.  இதனை அழியாமல் பாதுகாப்பது தமிழர்களின் கடமையாகும்.


18 கருத்துகள்:

  1. //நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வருங்காலத்தில் பிரபலமாகும்// உங்க டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு

    உங்கள் பெண்ணின் புகைப்படம் அழகு. உங்கள் ஜாடையில் உள்ளது.

    ஆம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தில் திருவிழாக்கள் மிக மிக முக்கியமானவை. அனால் இன்று அவற்றின் நிலையக் கண்டால் வருத்தமாக உள்ளது .

    மண் வாசனை அடிக்கும் திருவிழாக்கள் தான் வேண்டும் கார்பரேட் வாசனை அடிக்கும் கேளிக்கைகள் வேண்டாம்.

    படித்துப் பாருங்களேன்


    சென்னையில் வாங்கலாம் வாங்க

    பதிலளிநீக்கு
  2. சாமியைச் சொல்லி குடும்ப உறவுகள் இணையும் கொண்டாட்டமே நடத்தியிருக்கீங்க.கொடுத்து வச்சவங்கதான் நீங்க எல்லாரும் !

    //கவுறு குத்து, முளைப்பாரி எடுத்தல்// உண்மையாவே இது என்னன்னு தெரியாது விச்சு.காவடிபோல புல்லில் சேய்து துக்கியிருக்கிறாங்களே.அது என்ன ?

    கோலம்...என்ன ஒரு அழகு.குட்டிக்கைக்கு அன்பான முத்தமொன்று !

    ச்ச...இப்ப்டிச் சொல்லியிருந்தா சுவிஸ்ல இருந்துகொண்டே மஞ்சள் தண்ணி ஊத்தியிருப்பேனே.மிஸ்ஸிங்.சரி சரி அடுத்த வருஷம்.ஓகே...அழாதீங்க.ப்ளீஸ் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புல்லில் செய்து இருப்பதுதான் முளைப்பாரி. இது எவ்வளவு வளர்ந்திருக்கோ அவ்வளவு பக்தினு அர்த்தம். கவுறு குத்து என்பது ஊசியில் நூல் கோர்த்து உடம்பில் இரு பக்கமும் குத்துவது. சிலா குத்து என்பது கம்பியால் உடம்பில் இரு பக்கமும் குத்துவது.. பரவாயில்ல சுவிஸ்ல இருந்தே மஞ்சள் தண்ணிய ஊத்துங்க.

      நீக்கு
  3. வெளியூரில் இருக்கும் நபர்களும் பொங்கல் தினத்தன்று சொந்த ஊருக்கு வருவதால் பிறந்த ஊரின் மகத்துவத்தை உணரலாம். தமிழ்நாட்டின் பாரம்பரியங்களில் இது போன்ற விழாக்களும் முக்கியமானது.

    அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தங்கள் 'அருமை மகள்' இட்ட 'அழகு கோலம்' கண்களை அள்ளுகிறது விச்சு சார் ..!

    பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு சார் ! கோலம் அருமை !

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    சஹானாவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஊரைப் பற்றி அழகாக சொல்லியிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  8. திருவிழாக்களைப்பார்ப்பது மிக அழகு.அதிலும் கிராமத்து திருவிழாக்களில் இருக்கிற ஈரம் ரொம்பவே அதிகம்.

    பதிலளிநீக்கு
  9. இது அப்படி ஒன்றும் பிரபலமான ஊர் இல்லை. நான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் வருங்காலத்தில் பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது.

    ////

    karrrrrrrrrrrrrrrrrr:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பத்து வருடம் கழித்துப்பாருங்கள். நிச்சயம் பிரபலமாகும் ஆதிரா. நீங்கள் ஒரு தடவை வந்துட்டுப்போனால் உடனே பிரபலமாயிடும்.

      நீக்கு
  10. கோயிலும் கொண்டாட்டத்தையும் பார்க்க, ஆசையாகவும் அழகாகவும் இருக்கு.... அதில விளக்குகளைச் சுமந்து செல்வது நம்மட விச்சு மாஸ்டர் தானே?:))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க... எப்படியாவது என்னைய சுமக்க வச்சிடலாம்னு நினைக்கிறீங்க. நடக்காது.

      நீக்கு
  11. மகள் துருதுருவென நல்ல குட்டி சுட்டியாக இருக்கிறா, அவவின் கன்னிக்கோலமும் அழகு.. டக்கெனப் பார்க்க பிள்ளையார்போலவே இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. //பொங்கல் கொண்டாடிய மறுநாள் முறைப்பெண்கள் மஞ்சள் தண்ணீரை மாமன் மேல் ஊற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்(என்மேல் யாரும் ஊற்றவில்லை...கொஞ்சம் வருத்தம்தான்)

    ////

    ஹா..ஹா..ஹா.. குசும்பு?:)))).. அடுத்தமுறை உங்களுக்கு நீங்களே ஊத்திப்போட்டு.. மாமாட மகள் ஊத்தினவ என பெருமையாச் சொல்லித் திரியுங்கோ.. எப்பூடி என் ஐடியா?:))...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹேமா ஊத்துறேன்னு சொல்லியிருக்காங்க...(இப்பவே நனைஞ்சது போல இருக்கு...ஐஸ் ஐஸ்)

      நீக்கு
  13. உங்கள் மகளும் அழகு அவளிட்ட கோலமும் அழகா இருக்கு!
    படங்களோடு பதிவு ரொம்ப நல்லா இருக்கு!
    எங்க ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு போன மாதிரி இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க யுவராணி. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க. மிக்க நன்றி.

      நீக்கு