வியாழன், மே 17

விகடன் பத்திரிகையிலிருந்து மதன் விலக்கப்பட்டார்


பல ஆண்டுகளாக ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு கேள்வி பதில் எழுதி வருபவர் மதன். அதற்கென்றே வாசகர் வட்டம் உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பத்திரிகைக்காக உழைத்துள்ளார்.இணை ஆசிரியராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவும் இவருக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வெடித்தது. எனவே இவர் பல பொறுப்பிலிருந்து சுமூகமாக விலகிக்கொண்டார். ஆனால் மதனின் கேள்வி பதில்கள் மற்றும் கார்ட்டூன்கள் மட்டும் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்தது.  கடந்த 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.


இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
அதில், “பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் ‘ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் – வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.
2.5.2012 இதழில் ‘காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!
ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், ‘அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.
முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.
…வரும் இதழிலேயே ‘புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.
இதற்கு விகடன் பின்வருமாறு இந்தவார இதழில் பதிலளித்துள்ளது.






எது எப்படியாயினும் இனிமேல் விகடனில் மதனின் கார்ட்டூனும், கேள்வி பதிலும் இடம்பெறாது என்பது மட்டும் உண்மை. இது வாசகர்களுக்கு பெரும் இழப்புதானே.
ஆனந்த விகடனில் இடம்பெற்ற மதனின் சில கார்ட்டூன்கள்.












16 கருத்துகள்:

  1. நல்ல அலசல் அன்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே.

      நீக்கு
  2. நிச்சயம் விகடன் வாசர்களுக்கு இழப்புதான் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  3. அடடா இந்த நியூஸ் இப்பத்தான் அறிகிறேன்.... மதனுக்குத்தெரியாமல் அப்படம் போட்டதெனில் அது வேண்டுமென்றேதானே செய்திருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. இந்தக்காலத்தில ஆரையும் நம்பக்கூடாது.... எதுவேணுமென்றாலும் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா. யாரையும் நம்பாவிட்டாலும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

      நீக்கு
  5. மதனை இனி ஆனந்த விகடனில் காணமுடியாது என்ற செய்தி மிக்க அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. ஆனந்த விகடன் வந்ததும் முதலில் பார்ப்பதே மதனின் கேள்விபதில் தான்.

    ஆற்றல் உள்ளவர்கள் எங்கு சென்றாலும் பிரகாசித்துக் கொள்வார்கள். ஆனந்த விகடன் என்னைப்போல பல வாசகர்களை இழக்கப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் மணிமேகலை. விகடனையும் மதனையும் பிரித்துப்பார்க்க கொஞ்சம் கஷ்டம்தான் இருக்கு.

      நீக்கு
  6. இதற்கு சுமுகமான தீர்வு கண்டிருக்கலாம். மதனின் படைப்புகள் ஆனந்த விகடனில் வெளிவராது என்பது விகடனுக்கு இழப்புதான்.
    தலைமுறை இடைவெளிகள்தான் இதற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல அலசல் ! இனி நிறைய வாசகர்களை விகடன் இழக்க நேரிடும் !

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா18 மே, 2012

    Muralidharan sir's statement is right.

    nagu
    www.tngovernmentjobs.in

    பதிலளிநீக்கு
  9. மதனை விலக்கிவிட்டார்கள் என்ற செய்தி பார்த்தேன்.நீங்கள் விளக்கம் தந்திருக்கிறீர்கள் விச்சு.நன்றி.இதெல்லாம் அரசியல்.நாங்கள் கதைக்கிறதோ முடிவு சொல்றதோ சரிவராது.திடீரெண்டு மாறிப்போயிடும் !

    பதிலளிநீக்கு
  10. மதன் கேள்வி பதில் வராதது விகடனுக்கு இழப்போ இல்லையோ...? வாசகர்களுக்கு ஏமாற்றம் என்பது உண்மை........

    பதிலளிநீக்கு
  11. we miss madaan .....not ananatha vikadan.....because tha last dmk period a.vikadan compramise many issuses...like dayanithi & kalanithis (kd brothers)......thers money shuts a.vikadans faith...

    பதிலளிநீக்கு
  12. hm.... perum elapputhaan....


    http://puthiyaulakam.com

    SEE THIS WEBPAGE

    பதிலளிநீக்கு