இன்றைய காலகட்டத்தில் நாம் மிகவும் பாதுகாப்பாக வாழ்வது ரொம்ப முக்கியம். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் நோய்கள் மிகவும் எளிதாகப் பரவுகின்றது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொண்டு வாழ்வது சாத்தியமா? நம்முடைய பொருள்களை திருடர்களிடமிருந்து பாதுகாப்பது எப்படி? என்று ஒரு விரிவான அலசல்.
தண்ணீர் குடிக்கிற டம்ளரைக்கூட நம்மாளுக்கு விட்டுவிட மனசு வராது. அதுக்கு அதைவிட காஸ்ட்லியா ஒரு செயின வாங்கி கோர்த்து பாதுகாக்கணும்.
சாதா டம்ளருக்கே இந்தக் கதின்னா!!! செருப்பு முதற்கொண்டு கம்ப்யூட்டர் வரை நாம் அனைத்துப் பொருட்களையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சில அத்தியாவசியப் பொருட்களைப் பாதுகாப்பது எப்படி என்பதனை கூகுளின் உதவியோடு மொக்கையாக அதுவும் மிக மிக மிக மகா மொக்கையாகப் பார்க்கலாம். முதலில் சைக்கிளைப் பாதுகாப்பது எப்படி? நாம் எப்படி பூட்டு போட்டு சென்றாலும் பலே திருடர்கள் அலாக்காகத் தூக்கிச் சென்றுவிடுகின்றனர். எனவே முடிந்தவரை எவ்வளவு பூட்டு போட முடியுமோ அத்தனை பூட்டையும் போட்டுற வேண்டியதுதான்.
அடுத்து மிக முக்கியமான ஒன்று செருப்பினை பாதுகாப்பது. திருமண மண்டபங்களில் இதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் உள்ளது. சாதா செருப்புனாலும் அது காசு கொடுத்து வாங்கியதாச்சே... அதனால போடுங்க இன்னொரு பூட்டு.
இப்படி தனித்தனியா இரண்டு பூட்டு போடுவதைவிட நம்மாளு யோசிச்ச மாதிரி இரண்டையும் சேர்த்துப்போட்டா பைசா மிச்சம். (எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க!!!)
சைக்கிளுக்கே இப்படி யோசிச்சோம்னா பைக், கார் இதையெல்லாம் எப்புடிங்க பாதுகாக்கிறது? இதுல ஹெல்மெட் வேற தூக்கிக்கிட்டே அலையனும். அதுக்கும் ஐடியா இருக்குங்க...
நம்முடைய மொபைல்போனை பாதுகாக்கவும் ஒரு பூட்டுதான் போடவேண்டியுள்ளது. முடிந்தால் ஒரு பூட்டுக்கு பாதுகாப்பா இன்னொரு பூட்டும் போடலாம்.
தண்ணீரில் குளிக்கும்போது நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அதுவும் இந்துமகா சமுத்திரம் போன்ற மிகப்பெரிய கடலில் குளிக்கும்போது நம்மைப் பாதுகாக்க நீங்கள் பெரிய பெரிய சாதனமெல்லாம் யோசிக்கவே வேண்டாம். சாதாரண வாட்டர் பாட்டில்கள் போதும். நம்மையும் நம்மை நம்பி வந்தோரையும் மிகச் சாதாரணமாகப் பாதுகாக்கலாம்.
இதெல்லாம் விடுங்க ஐந்து ரூபாய் திண்டுக்கள் பூட்டு இருந்தா போதும். இந்த கம்ப்யூட்டர்ல வைரஸ் வராமல் பாதுகாப்பது எப்படி?
இது ரொம்ப சிம்பிள் வைரஸ் வராமல் தடுக்க ஒரு பாதுகாப்பு சாதனம் உள்ளது (பார்க்க படம்) இதனைக் கொண்டு கம்ப்யூட்டரை காப்பாற்ற வேண்டும்.
கம்ப்யூட்டரிலிருந்து நம் கண்களைப் பாதுகாக்கவும் ஒரு எளிய வழி உண்டு. அது...
நாம் ரோட்டில் செல்லும்போது சிலபேர் நம் பின்புறத்தை உரசிச் செல்வதுண்டு. பின்பு சாரி என்று சொல்லிவிட்டு நழுவிவிடுவார்கள். பின்புறம் டேமேஜ் ஆகாமல் இருக்க வண்டியில் உள்ளதுபோல் ஒரு டேஞ்சர் லைட் பொருத்துவது மிக நல்லது. டெய்லரிடம் மாடல் காண்பிக்க இந்தப் படத்தினை உபயோகப்படுத்தவும்.
குழந்தையை வண்டியில் (டூ வீலர்) பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மிக பாதுகாப்பான வழி என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் குழந்தையை வைத்து அது இருக்கும் இடமே தெரியாமல் அழைத்துச் (நசுக்கிச்) செல்வதாகும். தொப்பை உள்ள கணவர் என்றால் மிகச் சவுகரியம். மனைவி வசதியாக பிடித்துக்கொள்ள உதவும்.
மனைவியின் பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்க பூங்கொத்து கொடுக்கலாம். இல்லாத பட்சத்தில் தெருவில் எட்டிப்பார்த்துவிட்டு காலில் விழலாம். (தப்பேயில்லை... அடியைவிட இது எவ்வளவோ மேல். ...நாமெல்லாம் மேல்தான!!)
மனைவியை மற்றவர்களிடமிருந்து அடிவாங்காமல் காப்பாற்ற இந்த வீடியோவினை கண்டிப்பாகப் பாருங்கள்.
குறிப்பு: இந்த மொக்கையான பதிவினைப் படித்துவிட்டு யாருக்காவது உடல்நிலையோ, மனநிலையோ பாதிக்கப்பட்டால் இந்தப் பதிவு பொறுப்பாகாது. இது சிரிக்க மட்டுமே.... கோவம் கொள்பவர்கள் தயவுசெய்து மருத்துவரிடம் செல்லவும்.
மனைவியை மற்றவர்களிடமிருந்து அடிவாங்காமல் காப்பாற்ற இந்த வீடியோவினை கண்டிப்பாகப் பாருங்கள்.
குறிப்பு: இந்த மொக்கையான பதிவினைப் படித்துவிட்டு யாருக்காவது உடல்நிலையோ, மனநிலையோ பாதிக்கப்பட்டால் இந்தப் பதிவு பொறுப்பாகாது. இது சிரிக்க மட்டுமே.... கோவம் கொள்பவர்கள் தயவுசெய்து மருத்துவரிடம் செல்லவும்.
எங்கேயோ போய்ட்டீங்க அண்ணா.., உங்க தளத்துல பல பயனுள்ள பதிவுகளை படிச்சிருக்கேன். ஆனா, இதுவரை மொக்கை பதிவு படிக்கலைன்னு ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. அந்த ஏக்கத்தை தீர்த்துவச்சுட்டீங்க. பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குராஜி அக்கா... சும்மா ஜாலியா ஒரு பதிவு போடலாம்னுதான் இந்த ஐடியா. நன்றி உங்களின் கருத்துக்கு.
நீக்குஅச்சோ....வருவினம் வருவினம் கும்மியடி மணி&கோ குறூப்.சரி நானும்தான்.ஆனா அவையளவு கிட்னி எனக்கு இல்ல.அதனால் ரசிக்கிறது மட்டும்தான்.நீங்களும் அவையளின்ர குறுப் தானே விச்சு.அதுதான் இப்பிடி மாத்தி யோசிசு வச்சிருக்கிறீங்கள்.
பதிலளிநீக்குஇன்னும் வடை சுட்ட வாசனை போகேல்லப்போல இலண்டனுக்கும்,ஃபிரான்சுக்கும்,சென்னைக்கும்.சுவிஸ்க்கு இப்பத்தான் வந்திச்சு.உங்களுக்குப் பூட்டுப்போட வருவினம் பொறுங்கோ பொறுங்கோ !
ஹேமா உங்கள பார்த்துதான் நானே இதை கத்துக்கிட்டேன். நிச்சயமா உங்க அளவுக்கு கிட்னி எனக்கு இல்லை.
நீக்குஎலியாருக்குக்கூட கிட்னி என்னமா வேலை செய்யுது.ச்ச.....எனக்குத்தான்....மணிட்ட அதிராட்ட கலையிட்ட கிட்னி கடன் கேட்டிருக்கிறன்.தந்திச்சினமெண்டா நானும் கொஞ்சம் கும்மியடிப்பன்.விச்சு ப்ளீஸ் கொஞ்சம் எனக்காகப் பரிந்துரை செய்யுங்கோ.சொக்லேட் தருவன் !
பதிலளிநீக்குபர்ஸ்ட் சாக்லெட்.
நீக்கு//இது ரொம்ப சிம்பிள் வைரஸ் வராமல் தடுக்க ஒரு பாதுகாப்பு சாதனம் உள்ளது (பார்க்க படம்) இதனைக் கொண்டு கம்ப்யூட்டரை காப்பாற்ற வேண்டும்.//
பதிலளிநீக்குஅப்பிடியெண்டா....கணணி ஆண்பாலா ?!
நோ நோ கணினி பெண்பால்...
நீக்குஇருந்தாலும் அந்த ஆன்டிவைரஸ் --- டூ மச் .
பதிலளிநீக்குடேஞ்சர் லைட் - டேஞ்சரான கற்பனை.
வீடியோ கிளிப்பின் கடைசிக் காட்சி - குபீரென்று சிரித்து விட்டேன்.(பெண்ணிய வாதிகள் வழக்குப் போடப் போகிறார்கள் - ஜாக்கிரதை)
தங்கள் கருத்துக்கு நன்றி சிவகுமாரன்.
நீக்குஅட...என்ன விச்சு.பதிவை 2 நாள் விட்டிருக்கல்லாம்.கும்மியடிக்கிறவைக்கு வாசம் போறதுக்கிடையில பதிவை மாத்திப்போட்டீங்கள்.போங்கோ சொக்கா இல்லை !
பதிலளிநீக்குவிளக்க படங்கள் அருமை எங்கயோ போயிட்டிங்க அண்ணா
பதிலளிநீக்கு