அம்மா அப்பாவை
மறக்க
ஆங்கில வழிக்கல்வி
இனிமேல் மம்மி டாடிதான்
வகுப்பறையில்
அக்கம்பக்கம் பார்க்காமல்
அன்னம்தண்ணீர் உண்ணாமல்
அந்நியனாய் ஒதுக்கப்பட்டேன்
அப்போதுதான் அறிவு வளருமாம்
மாமாகிட்ட ரைம்ஸ் சொல்லு
அத்தையிடம் ஆடிக்காட்டு
கீகொடுக்கப்பட்ட
பொம்மையாய் நான்
புத்தகப்பையை தூக்கும்போது
தூக்குகயிறாய்
உணர்ந்தேன்
என் சந்தோசம்
நான் புத்தகத்தில்
வைத்திருந்த மயிலிறகு
மீதுதான்
என் சுமையை
எளிதாக்கியது
தூக்கத்திலும் அதை
அணைத்திருந்தேன்
குட்டி போடும்
எனக்காத்திருந்தேன்
ஆசிரியர் கொடுத்த
ஹோம்வொர்க்கில்
புரட்டிய
புத்தகத்தாளோடு
மயிலிறகும் கிழிந்தது
அம்மா நீங்கள்
சொன்ன அனைத்தும்
செய்கிறேன்...
பத்திரமாக
என் மயிலிறகு வைக்க
ஹோம்வொர்க் இல்லாத
ஒரு புத்தகம்
எனக்கு கொடு!
வணக்கம் சார்..
பதிலளிநீக்குஆங்கில மொழிக் கல்வி மூலம் எம் மொழி எப்படி உதாசீனம் செய்யப்படுகின்றது என்பதனை கவிதையில் நிதர்சனமாய்ச் சொல்லியிருக்கிறீங்க.
கலக்கல்.
என் சந்தோசம்
பதிலளிநீக்குநான் புத்தகத்தில்
வைத்திருந்த மயிலிறகு
மீதுதான்
மயிலிறகாய் அழகிய குழந்தை மனது.. !
ஹோம்வொர்க் இல்லாத ஒரு புத்தகம் கொடுப்போம் குழந்தைக்கு..
பால்யத்த்தில்
பதிலளிநீக்குபுத்தகம் என்றவுடன் ஞாபகம் வருவது
நடுப்பக்கமும் மயிலிறகும் தான்
இன்றைய
பால்ய பிள்ளைகளுடன் அதை காணவில்லை
அதற் ய காரணம் இன்றையபெற்றோர்களின் நவ கலாச்சாரம் தான்
கவிதையில்
பால்மனதை உணர முடிந்தது தோழரே
புத்தகப்பையை தூக்கும்போது
பதிலளிநீக்குதூக்குகயிறாய்
உணர்ந்தேன் ///
இதுதானே இன்றைய யதார்த்தம்! சிறப்பான கவிதை விச்சு :-))
நன்றி.. மணியம் கபே காபி வேணும்.
நீக்குமயிலிறகு மட்டுமல்ல, மழலையரின் மனவிறகும் கிழிக்கப்படும் கொடுமையைப் பள்ளிகளும் பெற்றோரும் என்றுதான் நிறுத்துவரோ? மனம் தொட்டக் கவிதை விச்சு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குமன்ம் தொட்ட நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.பள்ளிகள் பெரும்பாலும் பிள்ளைகளை விரும்பி வரவழைக்கிற தினம் பிள்ளைகள் மன்முவந்து படிக்கிறதினமாக மாறிப்போகும்/
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்.
நீக்குவகுப்பறையில்
பதிலளிநீக்குஅக்கம்பக்கம் பார்க்காமல்
அன்னம்தண்ணீர் உண்ணாமல்
அந்நியனாய் ஒதுக்கப்பட்டேன்
அப்போதுதான் அறிவு வளருமாம்??????????????
நிஜமாவா சொல்றிங்க ???????
குழந்தைகளின் ஏக்கம் சொல்கிறது கவிதை வரிகள்.இன்றைய குழந்தைகளின் தங்களுக்கான விருப்பங்களைக்கூட பெற்றோர்கள் மறுக்கிறார்கள்.எங்களைப்போல புழுதி அளையும் குழந்தைகள் யார் இப்போ !
பதிலளிநீக்குநன்றி ஹேமா. எங்க கூட்டத்தை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க. கூட்டத்தையே காணோம்.
நீக்குநாங்களும் மயிலிறகு வைத்து குட்டி போடுமான்னு அடிக்கடி திறந்து பார்த்ததால் புத்தகம் தான் கிழிந்தது ஒரு காலத்தில்.
பதிலளிநீக்குவிச்சு கூட்டம் கண்ணிற்கு தெரியாது.வருவாங்க,வாசிப்பாங்க,பறந்துடுவாங்க.