செவ்வாய், மே 22

வளைந்து கொடுக்கும் பெண்

இன்றைய நவநாகரீக!!! உலகில் பெரும்பாலான குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் வருகிறது. அதுவும் கணவன் மனைவிக்குள்தான் பிரச்சினைகள் அதிகம். திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்தில் முடிவடைகிறது. குறிப்பாக நானா? நீயா? என்பதின் பிடிவாதப் போக்குதான் காரணம். இதில் யார் விட்டுக்கொடுப்பது என்பதில் தொடங்கி அனைத்துமே பிரச்சினைதான். தான் மட்டுமே புத்திசாலி என்பது போலவும் மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது போலவும் சிலபேர் நடந்துகொள்வார்கள். அதிலும் கணவன் என்பவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் மட்டுமே முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாய் இருந்தால் அந்த குடும்பம் உருப்பட்ட மாதிரிதான். இதனை ஒரு (தமிழ் தெரிந்த) நண்பனிடம் சொன்னால் திருவள்ளுவரே மனைவியின் பேச்சினை கேட்க கூடாது என்று சொல்லியுள்ளார் எனக்கூறி ஒரு குறளையும் கூறினான்.

மனைவிழைவார் மான்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.  (குறள் சரியா?)

அவர் எதைக்குறித்து எழுதினாரோ... அவரவர் தேவைக்கேற்ப பொருளை எடுத்துக்கொள்கிறோம். எனவே வளைந்து கொடுக்கும் பெண்தான் குடும்பத்திற்கு ஏற்றவள் என அடித்துக்கூறினான்.

சிலபேர் அடக்கமான பெண்தான் வேண்டுமென்று அடம்பிடித்து தாலி கட்டுவார்கள். அடக்கமான பெண் கிடைக்கும்வரை திருமணத்தினை தள்ளி வைத்துக்கொண்டே வருவார்கள். 

உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் புரிந்து கொள்ளும் திறன், சிந்திக்கும் திறன், அனுபவம் போன்றவற்றில் வித்தியாசம் உள்ளது. தான் சொல்வதுதான் சரி என்பது எப்போதும் சரியாக இருக்காது. எனக்கு ஒரு டவுட் அடக்கம்னா என்ன? வளைந்து கொடுத்தல்னா என்ன? தேடிப்பார்த்தால் கீழே உள்ள படங்களில் இருப்பதுபோல்தான் பொண்ணு கிடைக்கும்போல. எனவே வருங்கால கணவன்மார்களே பார்த்து முடிவு பண்ணுங்கள்.

விச்சு

விச்சு

அலையல்லசுனாமி

விச்சு

வளைந்துகொடுக்கும் பெண்
அலையல்ல சுனாமி
அடக்கமான பெண்


10 கருத்துகள்:

 1. இவர்கள் பெண்களா அல்ல வளைந்து கொடுக்கும் ரபர்களா

  பதிலளிநீக்கு
 2. வளைந்து கொடுத்து வாழ்வதுசரிதான்
  ஆனால் படத்தில் உள்ளது போல் என்றால்
  ஆண்கள் ரொம்பப் படுத்தி எடுத்து விடுவார்கள்
  மனம் கவர்ந்த சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இம்பூட்டு வளைஞ்சு கொடுக்கற பெண்கள், ஆண்களையும் இத மாதிரி வளைக்க ட்ரை பண்ணாங்கன்ன வைங்க... நம்ம கதில்லாம் என்னாவுறது? அந்த ‘அடக்கமான’ பெண் சூப்பரப்பு!

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா22 மே, 2012

  என்றாலும் இப்படியா சிந்திப்பாங்க! நீங்க சுத்த மோசம்! என்ன மாதிரிக் கன்னா பின்னா கற்பனை ஊ!....... என்று சிரிப்பு தான் வருகிறது படத்தைப் பார்க்க....வளைந்து பெதடுக்கத் தான் வேண்டம். இப்படியல்ல....நல்வாழ்த்து!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 5. ஓஓஓ....குடும்பத்தில வளைஞ்சு குடுத்து இருக்கோணும் எண்டு அம்மா,பெரியம்மா,அம்மம்மா எல்லாரும் அடிக்கடி சொல்லுவினம்.அது இதுவோ.....சரி சரி என்ர உடம்பை வளைச்சுப் பழக்கவேணும்.படங்களோடு விளக்கம் தந்த வாத்தியார் விச்சுவுக்கு நன்றி நன்றி.பிறகு ஆராவது மாமியார் வீட்ல பிரச்சனைக்கு வந்தால் உங்கட பக்கம்தான் கை காட்டுவன்.சரியோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹேமா... நல்லா வளைச்சு பழகுங்கோ. மாமியார் வீட்ல பிரச்சனை வந்தா அவங்களையும் வளைச்சு பழகச்சொல்லுங்கோ... என் பக்கம் கை காட்டிறாதீங்க. நான் அம்பேல்..

   நீக்கு
  2. வளைஞ்சு குடுங்கோவெண்டு வள்ளுவர் வாசுகி எல்லாரையும் சாட்சியா வச்சுக் கதை சொல்லிப்போட்டு...அம்பேல் எண்டா எப்பிடி வாத்தியாரே....கலைச்சுப் பிடிப்போம்....ல !

   நீக்கு
 6. விச்சு சார் ரொம்ப சீரியஸாக கட்டுரையை அரம்பித்து கட்டுரைகளுக்கிடையில் புருவம் மேலேறும் படியான படங்களையும் போட்டு,இறுதியில் காமெடியாக முடித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. வளைஞ்சு கொடுக்க வேண்டியதுதான், அதுக்காக இவ்வளவுக்கா? படங்கள் பிரமாதம்! கட்டுரையும்!

  பதிலளிநீக்கு
 8. வளைந்து கொடுப்பவள் பெண்.
  வளைந்தே கிடப்பவன் ஆண்

  பதிலளிநீக்கு