புதன், ஜூலை 4

கமு.. கபி


கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்குப்பின்
அன்பே லூசே
நீ பேசினால் காதில் தேன் பாய்கிறது வாயை கொஞ்சம் மூடு
உனக்கு இந்த டிரெஸ் சூப்பர் என்னடி டிரெஸ் இது.. பிச்சைக்காரி மாதிரி
மொபைலில் நீ பேசிக்கிட்டே இருக்கனும் ம்ம்.. அப்புறம்.. சரி.. வை
உன் கை பட்டா எல்லாமே சூப்பர் கையை வச்ச வெட்டிருவேன்
உன் பக்கத்தில் உட்கார்ந்தா சொர்க்கம்  தள்ளிதான் உட்காரேன்
நீ சமைச்சாலே வாசனை தூக்குது என்னடி குழம்பு வச்சிருக்க.. உப்புமில்லை. உறப்புமில்லை
நீ பார்த்தாலே பத்திக்குது நீ பார்த்தாலே பத்தி எரியுது
நீ சிரிச்சாலே சொக்குது அதென்ன சிரிப்பு .. வாயை கோணிக்கிட்டு
இன்னும் கொஞ்ச நேரம் பேசேன் தூங்க விடு
உன் மடியில படுக்கணும் கொஞ்சம் தள்ளிப்படு
தியேட்டருக்கு வந்தாலும் உன்னையத்தான்  பார்க்கனும்போல இருக்கு சினிமாவப் பார்க்க விடுறியா
நீ விடிய விடிய பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன் கொர் ... கொர்...

அழகான பாடல் ஒன்று :




கொசுறு: கல்யாணத்துக்கு அப்புறமும் கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரியே இருங்க... வாழ்க்கையும் இனிக்கும்.

12 கருத்துகள்:

  1. பழகப்பழக பாலும் புளிக்கும் என்று சொல்லி பட்டியலே கொடுத்திட்டீங்க. கரெக்ட் தான்.

    //கொசுறு: கல்யாணத்துக்கு அப்புறமும் கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரியே இருங்க... வாழ்க்கையும் இனிக்கும்.//

    அதெப்படி முடியும்? அதுவும் எவ்வளவு நாளைக்கு முடியும்? கஷ்டம் தான்.

    பதிலளிநீக்கு
  2. ஹீ அனுபவம் போலும் இப்படி பதிவு!ஹீ

    பதிலளிநீக்கு
  3. இந்த பதிவை யாராவது விச்சு சார் வீட்டுக்கு ரீடைரெக்ட் பண்ணுங்கய்யா :D

    பதிலளிநீக்கு
  4. எனக்கு ஒரு சின்ன டவுட் விச்சு.. மேலே போட்டிருக்கும் படம் கமு பா? இல்ல கபி பா?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஆதிரா... உங்களுக்கு எப்படி தோணுதோ அப்புடி வச்சுக்கோங்க!

      நீக்கு
  5. உங்கட கொசுறு முசுறு மாதிரி நல்லாத்தான் இருக்கு, ஆனா சொல்றதோட நிறுத்திடக் கூடாது செயலிலும் காட்டோணும்... கர்ர்ர்ர்:)).

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா ஹா அறிவுரை சொல்லப் போகிறீர் என்று வந்தால் அழகான அட்டவணை போட்டு விட்டீர்கள்


    படித்துப் பாருங்கள்

    சென்னையின் சாலை வலிகள்

    seenuguru.blogspot.com/2012/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  7. சிரிக்கவைக்கும் சிந்தனை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் பகிர்வு.. உங்க ப்ளாக் நல்லா இருக்கு அண்ணா..

    பதிலளிநீக்கு