உன்னைப் பார்த்தநாள் முதல்
நானும் கவிஞனானேன்
உன்னை மலரென்றேன்
நிலவென்றேன்
ஒளியென்றேன்
குழந்தையென்றேன்
தாயென்றேன்
கற்பனையில் தோன்றும்
அத்தனையும் நீயென்றேன்நானும் கவிஞன்தான்!
பாரதியும்
கண்ணதாசனும்
வாலியும்
வைரமுத்துவும்
ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்
உன்னை விரும்பும்
நானும் கவிஞன்தான்!
நானும் கவிதை
எழுதுகிறேன் என்றேன்
நண்பர்கள் அனைவரும்
நக்கலாய் சிரித்தார்கள்
உன் பெயர் எழுதியதும்
வாயடைத்து நின்றார்கள்
நானும் கவிஞன்தான்!
உன்னுடன் சண்டை போட
வேண்டுமென்று தவித்தேன்
ஊடலின்பின் கூடலாயிருக்குமென்று!
உன் சமாதானமும் சண்டையும்
எனக்கு பிடித்தமானதாய்!
உன் காலை வணக்கம் முதல்
இரவு வணக்கம்வரை
அத்தனையும்
எனக்காகவே படைக்கப்பட்டது
அதையும் கவிதையில் படைத்தேன்
நானும் கவிஞன்தான்!
நீ நடந்தாலும் கவிதை
நீ பேசினாலும் கவிதை
நீ திட்டினாலும் கவிதை
உன்னிடமிருந்துவரும்
அத்தனையும் கவிதை
உன்னைச்சுற்றும் நானும்
என்பெயரும்கூட இனி
கவிதைதான்!
கவிஞர் விச்சு...
குறிப்பு : கவிஞர்கள் யாரும் இவனும் கவிஞனாயென்று கோவிச்சுக்காதீங்கப்பா. கவிஞர் பட்டம் பிரபலமான பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கியுள்ளார்கள்.
குறிப்புக்கு ஒரு குறிப்பு: அது எந்த பல்கலைக்கழகம் என்று விசாரித்து உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
கவிஞர் விச்சு.. கவிதை நன்றாகவுள்ளது..
பதிலளிநீக்குஆ..ஆ.. கவிஞர் விச்சு என்று என்னை அன்போடு அழைத்த தமிழ் வாத்தியாருக்கு நன்றி.
நீக்குஉங்கள் கவிதைக்கு நானும் பட்டம் தருகிறேன் உண்மையிலே இது கவிதைதான் சகோ
பதிலளிநீக்குகவிதை என்று ஒத்துக்கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.
நீக்குகாதல் வந்தால் இப்படித்தான்! கவிதைக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகாதல் வந்தால்தான் கவிஞரா? தங்கள் கருத்துக்கு நன்றி சார்.
நீக்கும்ம்ம் கவிதை அழகு
பதிலளிநீக்குபுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் ம் (;
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செய்தாலி சார்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குநானும் கவிஞர்தான் என்கிற நம்பிக்கையே பெரிதாய் இருக்கிற போது கவிதை தன்னால் வருமே/வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி விமலன் சார். நம்பிக்கைதானே வாழ்க்கை.
நீக்குகாதல் பித்தம் ஏற ஏற
பதிலளிநீக்குகவிதை வரிகள்
தானே வந்து விழும் என்கிறீர்கள் !
உண்மை தான்.
அருமையாக உள்ளது.
பாராட்டுக்கள்.
தங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
நீக்குச்ச....நான் கவிஞர் பட்டம் குடுக்கலாமெண்டு இருந்தன்....பிந்திப்போச்சு....சரி சரி மனசில காதல் வந்தாலே கவிதை தானா வந்திடும்போல.அருமையான கவிதை.வாழ்த்துகளும் பாராட்டும் விச்சு !
பதிலளிநீக்குஉங்களுக்குப்பிடித்த நல்ல பட்டமா கொடுங்க. athiraவிடம் ஐடியா கேட்காமல் கொடுங்க.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்பூடி?:)).
நீக்குஹேமா... என் பக்கத்தில ஒரு நாலெழுத்துப் பெயர் சொன்னீங்களே விச்சுவுக்கு:)) அதையே போட்டுக் கொடுங்க:)
அழகன்....
நீக்குஎன்ன கொடுமை சாமீஈஈஈஈஈ:))), என்னை விடுங்கோஒ.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்:))
நீக்குஉலகமே ஒத்துக்கொண்ட விசயத்தை நீங்கள் ஒத்துக்கமாட்டீங்களே... பரவாயில்லை.. தேம்ஸ்க்கு போறதுக்கு முன்னாடியாவது ஒத்துக்கோங்க.
நீக்குஅழகான கவிதை விச்சு !
பதிலளிநீக்குவாங்க தனிமரம்...
நீக்குஇந்தக் கவிதையைக் கலாய்க்க விருப்பமில்லை.அவ்வளவு ஆழமான ரசனையோட இருக்கு !
பதிலளிநீக்குஇந்தக்கிழவனோட கவிதையில் இதையாவது கலாய்க்காமல் ஏத்துக்கிட்டீங்களே.
நீக்குகுறிப்பு : கவிஞர்கள் யாரும் இவனும் கவிஞனாயென்று கோவிச்சுக்காதீங்கப்பா. கவிஞர் பட்டம் பிரபலமான பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கியுள்ளார்கள்.
பதிலளிநீக்கு//அதையும் சொன்னால் நானும் சந்தோஸம் கொள்வேன்!
நமக்கு யாருங்க கவிஞர் பட்டம் கொடுப்பாங்க! நானே ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பித்து கொடுத்துக்கிட்டாத்தான் உண்டு.
நீக்குதங்கள் கருத்துக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குகவிஞர் என்று பட்டம் வழங்கியதை விட தங்களுக்கு கவிப்பேரரசு என்று பட்டம் வழங்கப்பட்டிருந்தால்....விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்! :D
பதிலளிநீக்குசரி பட்டத்துக்கு எவ்வளவு துட்டு குடுத்தீங்க :D
BTW, கவிதை நல்லா இருந்துச்சு விச்சு சார்!
பட்டத்துக்கு துட்டு எதுக்கு.. நமக்கு நாமே கொடுக்கிற பட்டம்தானே! உங்களுக்கு ஏதும் பட்டம் வேணுமா?
நீக்குஅழகான கவிதை.........
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி.
நீக்கு//இப்படிக்கு
பதிலளிநீக்குகவிஞர் விச்சு... ///
இந்தக் கவிதை நல்லாயிருக்கே:))
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்... உங்களை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......மொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குகாதல் வந்தால் கவிதை வருமோ?
பதிலளிநீக்குஆரோடு காதல் வந்தால்ல்ல்ல்?:)
ஆணென்றால் பெண்ணுக்கும் பெண்ணென்றால் ஆணுக்கும்,,,
நீக்குஅப்போ ஆணுக்கும் ஆணுக்கும் காதல் வந்தால் கவிதை வராதோ?:))... மாஸ்டர் சூப்பர் மாட்டி:))
நீக்குஆணுக்கும் ஆணுக்கும் காதல் வந்தால் நானும் தேம்ஸில் வந்து குதித்துவிடுகிறேன்.
நீக்குமாஸ்டராக இருக்கும்போதா அல்லது கவிஞராக இருக்கும்போதோ விச்சு அழகாயிருக்கிறார்?:))....
பதிலளிநீக்குஇது பட்டிமன்றத் தலைப்பு...
இதில் நடுவர்... ஹேமா.
பங்குபற்றுவோர் .. ரெண்டுகால் மனிஷர்:).
மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).
எஸ்கேப் ஆகக்கூடாது,,,,,
நீக்குநல்லா இருக்குங்க... (கவிஞர் என்று உங்களுக்கு சந்தேகம் வராமல் இருந்தாலே போதும்)
பதிலளிநீக்குஅதுக்குத்தான் கவிஞர் விச்சுன்னு போட்டிருக்கு.. நன்றி தனபாலன் சார்.
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
பெண்ணின் பார்வை வரமன்றோ!
பேசும் விழிகள் பேறன்றோ!
கண்ணின் கணைகள் பட்டவுடன்
கன்னல் கவிஞன் உயிர்பெறுவான்!
மண்ணின் செல்வம் அத்தனையும்
மங்கை அழகுக் கீடாமோ?
விண்ணின் மழைபோல் கவிபாடும்
கவிஞா் விச்சு விஞ்சுகவே!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
கவிஞா் கி. பாரதிதாசன் ஐயாவே வருக வருக! முதன்முதலாக வருகைதரும் தங்களை வரவேகிறேன். தங்களின் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குஅருமை நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க
பதிலளிநீக்குவந்துட்டா போச்சு... தங்கள் வருகைக்கும் நன்றி
நீக்குகவிதை நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஒரு கவிஞரால் தான் இப்படி எழுத முடியும்.
வாங்க அருணா.. தங்கள் வருகைக்கு நன்றி.
நீக்குதமிழோடு விளையாடுவது அத்தனை தகுதியையும் தருகிறது.அது தரமாகவும் வேண்டும் என்னே இன்பநிலை.! கவித்துவம்...நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
கவிதை அருமை அண்ணா! காதல் கூடிப்போனால் காகிதங்களும் நிறைந்து போகும் என்கிறீர்கள்! கவிஞர் விச்சு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு