ஆளுக்கொரு உரிமை என நாடுகளுக்கிடையேயும் உலக வர்த்தக அமைப்புடனும் போடப்படும் ஒப்பந்தத்தினை கேலி செய்யும் வகையிலும் அது ஒரு ஏமாற்று வேலை என்பதையும் சொல்லும் விதமாக ஒரு கதை. ”முதலாவது”, “இரண்டாவது” என்று சொல்லப்படுவதன் அர்த்தமின்மையையும் இந்தக் கதையின்மூலம் விளங்கிக் கொள்ளலாம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் அறிவொளி கற்போர் கூறிய கதையின் தொகுப்பிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இது ஒரு எளிய கதைதான் என்றாலும் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது.
கழுதையும் குருவியும் நண்பர்களாம். இரண்டும் சேர்ந்து விவசாயம் செய்ய ஒப்பந்தம் செய்துகொண்டன. ஒப்பந்தத்தில் ஆளுக்கு ஒரு உரிமை தரப்பட்டது.
பயிரில் எந்தப்பகுதி யாருக்கு என்று தீர்மானிக்கும் முதல் உரிமை கழுதைக்கு. என்ன பயிரிடுவது என்று தீர்மானிக்கும் இரண்டாம் உரிமை குருவிக்கு.
விவசாயம் செய்ய ஆரம்பிக்கும் முன் ”நண்பா! பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்?” என்று குருவி கனிவோடு கேட்டது. முதல் உரிமை பெற்ற கழுதை விறைப்பாகச் சொன்னது. “பயிரின் கீழ்ப்பகுதி எனக்கு; மேல்பகுதி உனக்கு” என்று தன் ‘முதல் உரிமை’யை நிலைநாட்டியது.
குருவி ,சரி’ என்றது. பயிரைத்தேர்ந்தெடுக்கும் ‘இரண்டாவது உரிமை’ குருவியிடம் இருந்தது. குருவி நெல்லைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டது. குருவிக்கு நெல் கிடைத்தது.
அடுத்தமுறை இப்போது பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்?” என்று குருவி கனிவோடு கேட்டது. “பயிரின் மேல்பகுதி எனக்கு; கீழ்ப்பகுதி உனக்கு” என்று கழுதை ஜாக்கிரதையாக சொன்னது. குருவி இப்போது கடலை பயிரிட்டது. கழுதைக்கு இலைகள் மட்டும்தான் கிடைத்தது.
அடுத்தமுறையும் ”இப்போது பயிரில் உனக்கு எந்தப்பகுதி வேண்டும்?” என்று குருவி கேட்டது. பதில் சொல்ல கழுதை ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டது. ”இந்தமுறை மேல்பகுதி, கீழ்ப்பகுதி எனக்கு, நடுப்பகுதிதான் உனக்கு” என்று கழுதை சொன்னது. குருவி நமட்டுசிரிப்பு சிரித்தது.
“சரிப்பா! வச்சுக்க” என்று சொல்லிவிட்டு குருவி கரும்பு பயிரிட்டது. கழுதைக்கு வழக்கம்போல தூறும், கொழுத்தாடையும் கிடைத்தது. குருவிக்கு ருசியுள்ள நடுப்பகுதி கிடைத்தது.
கழுதைக்கு ஏற்பட்ட ஏமாற்றம், அவமானத்தால் ஒப்பந்தம் அத்தோடு முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தினை பார்த்துப்போடுங்கப்பா....
இதுல உள்குத்து எதாவது இருக்கா சகோ?
பதிலளிநீக்குவிவரமான குருவியா இருக்கே... நன்றி சார்...
பதிலளிநீக்குநல்லதொரு கதை! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
அருமை.
பதிலளிநீக்குஇப்படித்தான் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
வாழ்த்துகள்.
தந்திரமான குருவி!
பதிலளிநீக்குகதை அருமை...
பதிலளிநீக்குஆனால் உள்ளுக்குள் யாருக்கோ உதை விழுது....
யாருக்கும் இல்லைங்க.. இது நம்மள மாதிரி சின்னப்பிள்ளைங்க கதை.
நீக்குஅறிவான குருவி.பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்னுடைய தளத்தில்
தன்னம்பிக்கை -3
தன்னம்பிக்கை -2
அந்த குருவி இவ்வளவு அறிவோட இருக்க காரணம் என்ன தெரியுமா விச்சு சார்.. அதுக்கு அறிவு வர ட்ரைனிங் கொடுத்தது நான் தான்.. (யாருய்யா அது.. அங்க உருட்டுக்கட்டையோட கிளம்பி ஓடியாறது)
பதிலளிநீக்குஉருட்டுக்கட்டையெல்லாம் இல்லை...உருட்டுக்கம்பிதான்..
நீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குதெளிவானவைகள் காலச் சூழலுக்குத்
தகுந்தமாதிரி யோசித்துப் பிழைத்துக் கொள்கின்றன
பாவம் பெரும்பாலனவைகளாகிப்போன
கழுதைகள்தான் காலமெல்லாம் ஏமாந்தே சாகின்றன
சிந்திக்க வைத்துப்போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்.
நீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குஆஹா அருமையான ஒப்பந்தம்.. வாங்கோ விச்சு வலையுலகில் நாங்களும் ஒப்பந்தம் ஒன்று செய்வோம்..:).
பதிலளிநீக்குநீங்க கடலை கொண்டு வாங்க, நான் உமி கொண்டு வாரேன்... ரெண்டையும் கலந்து ஊதி ஊதி திங்கலாம். ஒப்பந்தத்திற்கு ரெடியா?
நீக்குயாருக்காகவோ சொன்னமாதிரி இருக்கு இந்தக் கதை.படிச்சாங்களா விச்சு ?
பதிலளிநீக்குஅருமை நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க
பதிலளிநீக்குபய புள்ளைங்க எப்படி எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்களேன்!
பதிலளிநீக்கு