சனி, நவம்பர் 3

படிப்பு

         படிப்பு என்றால் என்ன? மனிதனை உருவாக்குவதே படிப்பு. அப்போ! படிக்காதவனெல்லாம் மனிதனில்லையா? பக்குவப்பட்ட, அறிவுடைய, சிந்திக்கும் திறனுடைய ஒருவனை உருவாக்குவதே கல்வி. உலகைப்பற்றி அறியவும் பலதரப்பட்ட சம்பவங்களை தெரிந்து கொள்ளவும்தான் படிப்பு உதவும்.
          அந்த படிப்பை ஒருவன் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறனோ அவனே வெற்றியடைகிறான். என்னுடன் படித்தவர்களில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தனர். அதில் இன்னும் சிலர் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் சராசரி மதிப்பெண் எடுத்த பலர் வாழ்க்கையில் ஒரு நல்ல அல்லது வெற்றிகரமான நிலைமையை அடைந்துள்ளனர். ஏனெனில் நன்றாக படிக்கும் பலர் புத்தக அறிவு மட்டுமே போதும் என்றிருந்துவிட்டனர். அதற்குமேல் வாழ்க்கைக்கல்வி என்ற ஒரு விசயம் இருப்பதை மறந்தும் விட்டனர்.

            சிலர் அரசுவேலை ஒன்றையே குறியாக வைத்து படிக்கின்றனர். ஆனால் அது தராத ஒரு வெற்றியை தனியார் வேலைகள் தருகின்றன. அரசு வேலையில் இருபது வருடங்களில் கிடைக்கும் பலன்களில் ஒரு நல்ல தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் கிடைக்கும் பலன்கள் பத்து வருடத்தில் கிடைக்கின்றன. ஆனால் அதனையும்விட சிறந்த ஒன்று சுயதொழில்.

           சுயதொழிலில் பல இலாபங்கள் நிச்சயமாக உள்ளன. கடினமாக உழைத்தால் பலபடிகள் வாழ்க்கையில் முன்னேறலாம். கற்றுக்கொள்ள வேண்டியது படிப்பைவிட வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்பதையே ஆகும். இதனை வேறுவிதமாகவும் கூறலாம். படிக்கும் படிப்பினை வாழ்க்கையில் எப்படி தொடர்புபடுத்துவது என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினையை எப்படி தீர்ப்பது, எவ்வாறு ஒரு நல்ல முடிவினை எடுப்பது என்பது போன்ற விசயங்களை அறிந்துகொள்ள வேண்டும். நேர்முகத்தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது, குழுவிவாதத்தில் எப்படி பங்குகொள்வது என்பதையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதை இன்றைய கல்விமுறை கற்றுக்கொடுக்க மறந்துவிட்டன. பாடத்திட்டமும் அதைச்சொல்லித்தர முயற்சிக்கவில்லை என்பது காலத்தின் கொடுமையே.
         குழந்தைகளையும் படி படி என்று நச்சரிக்காமல் அவர்களுக்கு பிடிக்கும் பல விசயங்களில் ஈடுபடச்செய்யலாம். அது குழந்தைக்கு நிச்சயம் பிற்காலத்தில் உதவும். முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன்தான் சிறந்த மாணவன் என்ற எண்ணத்தினை முதலில் மாற்ற வேண்டும். எல்லோரும் முதல் மதிப்பெண் எடுத்தால் முதல் என்பதற்கே அர்த்தமில்லை. எந்த துறையில் ஒருவனுக்கு திறமை இருக்கிறதோ அதில் ஈடுபடச்செய்வதுதான் சாலச்சிறந்தது. 

9 கருத்துகள்:

  1. 10 / 12 வகுப்பில் முதலிடம் பெறும் மாணவ மாணவர்களின் பிற்கால வாழ்க்கையைப் பாருங்கள்... வாழ்வில் கடைசி நிலையில் இருப்பார்கள்... (சிலரைத் தவிர) இந்த கடைசி நிலை என்பது : பணமும் வசதியையும் சொல்லவில்லை... வாழும் முறை, மனநிலை-இப்படி..

    தன் மனதைப் பொறுத்து எல்லாமே அமையும்...

    நல்ல பல கருத்துக்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா03 நவம்பர், 2012

    ''..நன்றாக படிக்கும் பலர் புத்தக அறிவு மட்டுமே போதும் என்றிருந்துவிட்டனர். அதற்குமேல் வாழ்க்கைக்கல்வி என்ற ஒரு விசயம் இருப்பதை மறந்தும் விட்டனர்...''

    பல உண்மைகளைக் கூறப்பட்டுள்ளது.
    பிடித்துள்ளது.
    மிக்க நன்றி மாஸரர்.
    நலமா?...வாருங்கள்
    வேதா. இலங்காதிலகம்.



    பதிலளிநீக்கு
  3. அருமை நல்ல விழிப்புணர்வு சிந்தனை தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான்! படிப்பு என்று சொல்லி குழந்தைகளை கஷ்டப்படுத்தக்கூடாது! அவர்களுக்கு பிடித்ததை செய்ய கற்றுத்தரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல விழிப்புணர்வு

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றாகச் சொனீங்க.. குழந்தைகளுக்கு திணிக்கக் கூடாது. அப்படித்தான் இங்கத்தைய நாட்டுப் படடிப்பு இருக்கு. படிப்பதுக்கு முதலில் ஆர்வத்தைக் கொண்டு வருகிறார்கள், பின்பு திணிக்கத் தேவையில்லை, குழந்தை உணர்ந்து விரும்பிப் படிக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. படிப்பைப் பற்றி
    படிப்பினை தரும் தகவல்கள்..

    பதிலளிநீக்கு
  9. தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்
    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_7.html

    நன்றி

    பதிலளிநீக்கு