ஞாயிறு, அக்டோபர் 26

சிறுதுளி ஆசை
சின்ன சின்ன
ஆசைகள்
நிறைவேற புத்தனிடம் 
கேட்டேன்
எதன்மீதும் ஆசைப்படாதே 
என்று போதனை செய்தார்
புத்தனின் போதனைப்படிதான்
நடக்கிறேன்
நிறைவேறா ஆசைகளில் மட்டும்..!

-----------------------------------------------------------

பொருளற்ற ஆயிரம்
வார்த்தைகளைவிட
பொருளுள்ள ஒருசொல்
மேலானதாம்
அதுதான் அவளிடம்
காதலிக்கிறேன் 
என்று மட்டும் சொன்னேன்..!

----------------------------------------------------------

எதன்மீதும் ஆசைப்படாத
புத்தனின் ஆசை
ஆச்சரியம்தான்...!

----------------------------------------------------------

உங்களைத்தவிர
சரணடைய 
வேறு எவரையும்
நாடவேண்டாம் என்றாய்
நானும் நாடவில்லை
என்னவளைத்தவிர
 இருவரும் ஒன்றுதானே..!

----------------------------------------------------------

6 கருத்துகள்:

 1. எதன்மீதும் ஆசைப்படாதே
  என்று போதனை செய்தார் //

  பொருளுள்ள ஒருசொல்
  மேலானதாம் // மேலே உள்ள வரிகளை மிகவும் ரசித்தேன்

  கவிதைகள் 4 ங்கினையும் ரசித்தேன் சகோ.

  நன்றி தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படவேண்டும் என்று இதற்குத் தான் சொல்வதோஇனிமேல் கொஞ்சம் பார்த்துக் கேளுங்கள் அப்பதானே பலன் கிட்டும்.இல்லையா ஹா ஹா ...அனைத்தும் ரசித்தேன் சகோ ! தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 3. தொடர்வதற்கு google பொல்லோவர் வேலை செய்யவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இனியா, அதை எப்படி சரிசெய்வது எனத்தெரியவில்லை. கருத்திட்டமைக்கு நன்றி.

   நீக்கு
 4. ரசிக்கவைத்த கவித்துளிகள். பாராட்டுகள் விச்சு.

  பதிலளிநீக்கு