சனி, ஜனவரி 3

வா...வா...


எனக்கும் வயசாகின்றது
அவளுக்கும் வயசாகியிருக்கும்
தலைமயிரும் நரைத்துவிட்டது
ஒவ்வொரு முடிக்கும் தெரியும்
உன்னை நான் நினைக்கும்
நினைவுகளை
இப்போதெல்லாம்
அரைத்தூக்கத்தில்
அடிக்கடி விழிப்பு
கால்கை வலி
மூட்டுவலி
தலைவலி
எல்லாமுமாய் சேர்ந்துவந்த
போதிலும் பொறுத்துக்கொள்கிறேன்
உன்னால் வந்த
இதயவலியைத் தவிர
இரத்தக்கொதிப்பு
கூடிவிட்டதாம்
மருத்துவர் சொல்கிறார்
அவருக்கு தெரியுமா
கொதிப்பு வந்தது
எதனால் என்று
என்னை வாவா
என்று அழைப்பதே
இப்போதெல்லாம்
இந்த மண்மட்டும்தான்..!

7 கருத்துகள்:

 1. உள்ளிருந்து வாட்டிடும் உள்நினைவு நோயோடு
  சொல்லியதே சோகம் தொடுத்து!

  மனம் கனத்துப் போனது சகோ!
  உணர்வினைச் சொன்னவிதம் அருமை!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அச்சச்சோ இந்த விச்சு சகோவுக்கு வந்த சோதனையை பாருங்களேன்:(( அந்த நல்ல காரியம் இந்த புது வருடத்தில் நடக்க வாழ்த்துக்கள்:) சும்மா கலாய்தேன். ரொம்ப நல்ல இருக்கு உங்க பாட்டு:)

  பதிலளிநீக்கு
 3. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றிய பகிர்வு

  http://blogintamil.blogspot.in/2015/01/3.html

  முடிந்தால் வாசித்து கருத்திடுங்களேன்.

  பதிலளிநீக்கு
 4. அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா இந்த வருடப் பதிவை ம்..ம்..

  நரையுடன் கூடிய மூப்பும் அடுத்து
  நோயும் துயரம் தரும்!

  முகமது காட்ட மறுக்குமா மூப்பு
  அகம்தனை வாட்டும் நினைப்பு !

  அருமை சகோ ! follow பண்ண முடியாமல் இருக்கிறதே. இதனாலும் தாமதமாகிறது மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 5. நெகிழ்ச்சியான கவிதை சகோ.

  பதிலளிநீக்கு