வியாழன், ஜனவரி 15

மரித்தபின்

நல்லவேளை
நானும் உன்னை
பார்த்ததில்லை
நீயும் என்னை
பார்த்ததில்லை
கம்பியில்லா
தந்தியில் மனம்
அனுப்பும் செய்திகளை
என்னைப்போலவே
நீயும் லாவகமாக
படிக்கிறாய்
ஒவ்வொரு நாளும்
நான் எண்ணும்
நட்சத்திரங்களைத்தான்
நீயும் எண்ணிக்கொண்டிருப்பாய்
அதே தப்பும் தவறுமாக
அடுத்தமுறை
நட்சத்திரத்தை
சரியாக எண்ணிப்பார்
மரித்தபின்னும்
உன்னை மறக்காத
இப்படிக்கு
நான்..!


8 கருத்துகள்:

 1. ஆழமான காதல் கவிதை
  அற்புதமாய் இருக்கிறது
  வருத்தமாகவும் இருக்கிறது

  கவிதை நன்று

  பதிலளிநீக்கு
 2. //மரித்த பின்னும் மறக்க முடியாத நான்//,,,,மன ஆழத்தின் வார்த்தைகள்.

  பதிலளிநீக்கு
 3. மரித்தபின்னும்
  உன்னை மறக்காத...Deep feeling..
  Happy pongal
  Vetha.Langathilakam

  பதிலளிநீக்கு
 4. அருமை அருமை வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு