திங்கள், அக்டோபர் 3

தோலை உறிப்பான் தோழன்!

  'பாம்பென்றால் படையும் நடுங்கும்'.  பாம்பு விவசாயிகளுக்கு நிறைய நன்மை செய்கிறது. சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது... இன்னும்   இன்னும்...

           ஆனால்!!! மனிதன்  தன் தோலை மறைக்க அதன் தோலை உடையாகக் கொள்கிறான்.  மனிதன்  கொல்லாத உயிரினமே இல்லை எனலாம்.  அதைக் கொன்று ... தோலை உறித்து ...எல்லா விதமான ஆடை ஆபரணங்களும் செய்து அணிந்து கொள்கிறான்.   இது ஃபேசன் என்ற பெயரில் அனைவரையும் வாங்க வைப்பதற்கு அனைத்து ஊடகங்களும் துணை நிற்கின்றன. இவன் உறிக்கின்ற மான் , முதலை,  பாம்பு,  காண்டமிருகம்  போன்ற  அனைத்து   விலங்குகளின் தோலையும்  ( மனிதத் தோல் ஒன்றுக்கும் ஆகாது )  சொல்லிக்கொண்டே போகலாம்.   இதை   நிறுத்த  வேண்டும்  என்று   அனைத்து  விலங்குகளும் கதறுகின்றன?  கண்ணீர்  வடிக்கின்றன!!   இவனுக்குத்தான்  கேட்கவில்லை . "நாம் ஒன்றும் கடவுளில்லையே...  விலங்குத்  தோலை  உடையாக  உடுத்த"! பாவம் விலங்குகளுக்கு பஸ் மறியல், கடையடைப்பு, தீ வைத்து கொளுத்துதல், மனிதர்களை உயிரோடு எரித்தல், வேலை நிறுத்தம் செய்தல் குறைந்த பட்சம் உண்ணாவிரதம் இருத்தல் எதுவும் தெரியாது போலும். முடிந்தவரை தோலால் செய்யப்பட்ட   பொருட்கள்   வாங்குவதைக்  குறைப்போம் .   விலங்குகளை வாழவிடுவோம்!!!              

சிக்கிடுச்சு!!
நல்ல கலர்தான்!!
கொஞ்சம் நீளம் கம்மியாயிருக்கே?

எண்ணிக்கை குறைவா இருக்கு....ம்ம்..

தலையே...போ

உறிச்சுப் போடுவேன்...

சீக்கிரமா உறி..

நல்ல பாம்புதான்...

முதலையை மட்டும் விட்டு வைப்போமா?

தோல் கிடச்சிருச்சு!!
அழகான பை (அழுகிய பை)
டிரெஸ் ரெடி!!! என் தோலுக்கு மேல் விலங்குத் தோல்!!
       
                                                                                                      Thanks : funzug,google images
                                               





3 கருத்துகள்: