ஞாயிறு, ஏப்ரல் 8

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும். தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவித்தால் எனக்கு அது உற்சாகமாக அமையும். இதற்கு முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்து பார்க்கவும். மேலும்
அனைத்துப் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு.  மற்றும் முதுகலை தாவரவியல் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு இங்கே உள்ளது.



1.கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுவதும்
2.உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854
3.சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857
4.கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர்
5.கல்வி வாய்ப்பில் சமத்துவம் என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.
6.தற்சோதனை என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம்
7.புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி
8.எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ
9.பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு
10.மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10
11.School and Society ஆசிரியர் - ஜான்டூயி
12.WAIS எனப்படுவது - Wechsler's Adult Intelligence Scale
13.DIET எனப்படுவது - District Institute of Education and Training
14.கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது
15.மூளைச் சக்தி வீணாக்குதல் என்பது - கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்
16.ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ்
17.கவனத்தின் அகக்காரணி - மனோநிலை
18.கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின்
19.விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்
20.தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948
21.கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு
22.ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி
23.தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ
24.ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ்
25.மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69
26.மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ்
27. ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ்
28.எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல்
29.குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும்
30.சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர்.

1 கருத்து:

  1. பலருக்கும் பயனிக்கும் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.. தொடர்ந்து வினா தொகுப்புகளைத் தருக..

    பதிலளிநீக்கு