ஞாயிறு, ஆகஸ்ட் 26

உலக பெண் விஞ்ஞானிகள்

அலையல்ல சுனாமி
           இரா.நடராசன் அவர்கள் எழுதிய உலக பெண் விஞ்ஞானிகள் என்ற நூலில் இதுவரை நாம் கேள்விப்படாத பெண் விஞ்ஞானிகளின் பட்டியலைத் தந்துள்ளார். பெண் விஞ்ஞானிகள் யார்? யார்? எனக்கேட்டால் நிச்சயம் ஒரு சில பெயர்களைத்தவிர யாரையும் நமக்குத்தெரியாது.உலகின் முதல் விஞ்ஞானி ஒரு பெண்ணாகவே நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என சிந்தனையாளர் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிட்டுள்ளார். ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களைத் தெரிந்திருக்கும் அளவுக்கு பெண் விஞ்ஞானிகள் பெயர்களை நாம் தெரிந்திருப்பதில்லை. அதற்கான காரணம் ஆணாதிக்கமா? அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. பெண்களின் சிந்தனைகளை வளரவிடக்கூடாது என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.

         இந்த நூலை வாசிப்பவர்கள் கீழ்க்கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்வார்கள் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
1.பெண் விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் மிகச்சாதாரண குடும்பங்களில் பிறந்து அடிமை முறையில் ஊறிய சமூகத்தைப் போராடி வென்று தங்களது அறிவு ஜீவிதத்தை நிரூபித்தார்கள்.
2.பேரழிவு ஆதிக்க அறிவியலுக்கு பெண் விஞ்ஞானிகள் யாருமே துணைபோகவில்லை.
3.விஞ்ஞான உலகில் ஆண் விஞ்ஞானிகளின் ஆர்வ கோளாறுகளால் சூழ்ந்த ஆபத்துகளிலிருந்து பெண் விஞ்ஞான உலகம் நம்மைக்காப்பாற்றி மீட்கும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
4.புவியின் பாதுகாப்பை முன்மொழியும் சுற்றுசூழல் உட்பட நவீன அறிவியல் துறைகளைத் தோற்றுவித்தவர்களே பெண் விஞ்ஞானிகள்தான். எனவே அவர்களுடைய அறிவியல் உலக அமைதிக்கும் ஆக்கத்திற்குமான அறிவியல் ஆகும். இப்புத்தகத்தை உருவாக்கிய இரா.நடராசன்  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

       32 உலக பெண் விஞ்ஞானிகளின் பெயர்பட்டியல்

 1.மேரிகியூரி 2. மரியா ஜீயஸ் 3.எம்மா பெர்ரி கார் 4 ராச்சல் லூயிஸ் கர்சன் 5. ரோசலிந்த் எல்ஸி பிராங்க்லின் 6.கிரேஸ் முர்ரே ஹாப்பர் 7.ஜீலியட் கியூரி 8.லிஸி மெய்ட்னர் 9. மேரி ஏஞ்சல் பென்னிங்டன் 10.டொரோத்தி மவுட் வ்ரிஞ்ச் 11.மரியா டெல்கஸ் 12.சார்ஹாசி காட்சீக்கோ 13.எலன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ் 14.ஜிடி தெரசா ராட் நிட்ஸ் கோரி 15.டோரொத்தி க்ரோஃபுட் ஹட்ஜ்சிங் 16.மேரி ஹெலன் ஜோன்ஸ் 17.டெஸி லி  பியூ 18.மேரி ஜோன் அஸ்பர்ன் 19.ரீத்தா க்ளார்க் கிங் 20.வாலண்டினா தெர்ஸ் ஹோவா 21.பாலின் ராமர்ட் லூகாஸ் 22.ரீத்தா லெவி மொண்டால்சின் 23.லீன் அலெக்ஸாந்தர் மார்குலிஸ் 24.லுக்ரெஷியா கரோலின் ஹெர்ஷல் 25.சாலி க்ரிஸ்டன் ரைடு 26.டெட்சுகோ டெக்கபே 27.பிளாரன்ஸ் ஸ்வாம்புகு 28.ஷென்னான் டபிள்யூ லுசிட் 29. ஹெலன் கால்டிகாட் 30.ஜெர்டு பில்லி எலியன் 31.பார்பரா மெக்லிண்டாக் 32.கல்பனா சாவ்லா இவர்களைப்பற்றி மேலும் அறிய உலக பெண் விஞ்ஞானிகள் எனும் நூலைப் படியுங்கள். பெயர்களை ஆங்கிலத்திலும் தந்திருக்கலாம் எனபது என் எண்ணம்.பாரதி புத்தகாலயம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  பெண்களின் அவதாரங்களையும் கொஞ்சம் தெரிந்துதான் கொள்வோமே...

13 கருத்துகள்:

  1. பெண்களுடைய அறிவியல் உலக அமைதிக்கும் ஆக்கத்திற்குமான அறிவியல் ஆகும்

    மகிழ்ச்சியளிக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. படிக்கும் ஆவலை தூண்டுகிறது!

    பதிலளிநீக்கு
  3. // புவியின் பாதுகாப்பை முன்மொழியும் சுற்றுசூழல் உட்பட நவீன அறிவியல் துறைகளைத் தோற்றுவித்தவர்களே பெண் விஞ்ஞானிகள்தான். எனவே அவர்களுடைய அறிவியல் உலக அமைதிக்கும் ஆக்கத்திற்குமான அறிவியல் ஆகும். இப்புத்தகத்தை உருவாக்கிய இரா.நடராசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். // உண்மை தான்.

    மேலே கூறப்பட்ட பெண் விஞ்ஞானிகளில் சிலரை மட்டும் நான் படிக்கிறேன். அறிந்து கொண்டேன். அவரின் சாதனைகளும் கூறியிருக்கலாம். தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. சிறப்பானதொரு பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
    கோப்பை வென்ற இளம் இந்தியா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு நூலிலிருந்து பகிர்ந்துள்ள அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்ம்ம்ம்.. நல்ல பகிர்வு. எங்களில் சிலரையும்:)) இப்பட்டியலில் சேர்த்திருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவீங்க:))))).. ஹையோ இதுக்கெல்லாம் முறைக்கப்பூடா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே.....கை குடுங்கோ அதிரா !

      நீக்கு
    2. இதுக்கெல்லாம் கூட்டணி சேர்ந்திருவீங்களே...

      நீக்கு
  7. சிறப்பான பகிர்வு... நல்லதொரு தொகுப்பு...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பகிர்வு அண்ணா! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு