இலங்கையில் இனப்படுகொலை
அதைக்கண்ட
இந்தியாவுக்கு இதயமில்லை
மண்ணில் விழுந்தது
தமிழனின் உடலல்ல
அது மண்ணில் விதைக்கப்பட்ட
தமிழனின் விதை
விருட்சமாய் மண்ணினைப்
பிளந்து வளரும்
தமிழனை வீழ்த்த விரும்பிய
உன் அழிதலை
பிளக்க வரும்.
சேனல் 4ல் ஒலிபரப்பப்பட்ட இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் ஆவணப்படத்தினை புதிய தலைமறை தொலைக்காட்சி தமிழில் ஒலிபரப்பியது. அதில் பார்ப்போரை மனம் குலையச்செய்யும் காணொளியின் ஒரு சிறிய பகுதி.
நன்றி : படங்கள் மற்றும் காணொளி கூகுள் தேடலில் கிடைத்தவை.



ம்....வலி வலி வலி.சொல்ல ஏதுமில்லை விச்சு !
பதிலளிநீக்குஉங்கள் வலி புரிகிறது ஹேமா. என்னுடைய பதிவுகள் உங்கள் dashboardல் வருகிறதா? என்னுடைய பழைய follower gadget வேலை செய்யவில்லை.அதனால் கேட்டேன்.
நீக்குவிச்சு உங்கள் பதிவுகள் சிலசலமயங்களில் மட்டுமே வருகிறது !
நீக்குசொல்வதற்கு வார்த்தைகள் எழவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் நண்பா, நலமா இருக்கிறீங்களா?
பதிலளிநீக்குஇவற்றையெல்லாம் கண் முன்னே கண்டும் கையாலாகாதாராய் இருந்த வேதனை தான் இப்போது மனதை உறுத்துகிறது.
சேனல் 4ல் ஒலிபரப்பப்பட்ட இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் //
பதிலளிநீக்குநண்பா, இவ் இடத்தில் ஒளிபரப்பட்ட என்று வந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?
தங்கள் திருத்தத்திற்கு நன்றி நண்பா.
நீக்குஅய்யோ!கொடுமையான நிகழ்வுகளை பல வருடங்களாக கேள்விபட்டும் கண்ணால் கண்டும் என்ன செய்ய முடிந்தது.இனியாவது உலக நாடுகள் ஒன்று கூடி ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வார்களா?காலம் தான் பதில் சொல்லும்.எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு ஏற்படாமல் இருந்தது இல்லை.அதற்குண்டான நேரம் வரத் தொடங்கியிருக்கிறது என்று நம்புவோம்.விடியட்டும் வெளிச்சத்தை ஈழத்தமிழர்கள் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
பதிலளிநீக்குவேதனையாக இருக்கிறது. காணொளி பார்க்க மனதில் திடம் இல்லை.
பதிலளிநீக்கு