சனி, ஏப்ரல் 11

அறிவியல் ஆனந்தம் 7

அறிவியல் ஆனந்தம் 1
அறிவியல் ஆனந்தம் 2
அறிவியல் ஆனந்தம் 3
அறிவியல் ஆனந்தம் 4
அறிவியல் ஆனந்தம் 5
அறிவியல் ஆனந்தம் 6

மாம்பழத்தினுள் வண்டு எப்படி செல்கிறது? அது எவ்வாறு சுவாசிக்கும்?
 
அறிவியல்
மாம்பழத்தினுள் வண்டு உட்புகுவது கிடையாது. மாம்பூவீலேயே வண்டு முட்டை காணப்படும். மாம்பூ காயாகி, கனியாக மாறும். அந்தப்பூவிலுள்ள முட்டையும் தன் வாழ்க்கைச்சுழற்ச்சியை முடித்துக்கொண்டு பழத்திற்குள்ளேயே சிறிய வண்டாக மாறும். சுவாசித்தல் என்றாலே உணவுப்பொருள்களைச் சிதைத்து ஆற்றல் உற்பத்தி செய்யும் செயலியல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி ஆக்ஸிஜன் உதவியுடனும், இல்லாமலும் நடைபெறும். இந்த வண்டானது ஆக்ஸிஜன் உதவியில்லாமல் பழச்சர்க்கரையை சிதைத்து கிடைக்கும் குறைந்த அளவு சக்தி கொண்டு வண்டு ஓரிடத்தில் முடங்கி கிடக்கும். (மனிதர்களுக்கு மனசுன்னு ஒன்னு எப்படி உள்ள போச்சு..! அது எப்படி சுவாசித்து உயிர் வாழ்கிறது..!)

எறும்புகள் ஏன் சாரை சாரையாகப் போகின்றன?
அறிவியல்
எறும்புகளின் உடலில் பெரமோன் (Pheromone) என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள்களின் தூண்டுதல்களை உணர்ந்துகொண்டே ஒரு எறும்பை பின்தொடர்ந்து மற்றொரு எறும்பு பின்செல்கிறது. ( ஒரு அழகான பெண்ணின் பின்னால் ஆண்கள் பின்தொடர்வதற்கு என்ன வேதிப்பொருள் காரணம் எனத்தெரியவில்லை..!!)

இருளில் வளரும் தாவரங்கள் உயர்ந்து காணப்படுவது ஏன்?
அறிவியல் ஆனந்தம்
இருளில் வளரும் தாவரங்கள் உயர்ந்து காணப்படுவதற்கு ஜிப்ரலின் (Gibberellin) என்ற வளர்ச்சி ஹார்மோன்தான் காரணம். சூரிய ஒளி இல்லாதபோது இந்த ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும்.


கனகாம்பரம் வாடினாலும் அதன் நிறம் மாறுவதில்லையே ஏன்?
அறிவியல்
பூவிற்கு நிறம் கொடுப்பது ஆந்தோசைனின், சாந்தோஃபில் முதலிய நிறமிகள்தான். பூ வாடுதல் எனப்படுவது அதிலிருந்து நீர் இழந்து செல்கள் சுருங்குவது ஆகும். கனகாம்பரம் பூவில் நீர் அதிகம் இல்லை(வாடாமல் காகிதப்பூ போல). ஆதலால் அது நீர் இழப்பது குறைவு. எனவே அதன் செல்களிலுள்ள நிறம் மாறுவது இல்லை.

6 கருத்துகள்:

 1. அன்பு நண்பரே!/
  வணக்கம்!
  ன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 2. பல அறிவியல் சார்ந்த விஷயங்கள் நமக்கு ஆனந்தத்தை(ஆச்சரியத்தை) தரும்...அவற்றை தொகுத்து கொடுத்துள்ளீர்கள் நன்று....
  இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  வாழ்க வளமுடன்....

  பதிலளிநீக்கு
 3. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (11/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
 4. உங்கள் தளத்தில் இணைய முடியாமையால் தொடர முடியவில்லை சகோ.ம்..ம்..ம் நல்ல விடயங்கள் அறிந்து கொண்டேன் நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ! பல பதிவுகளை மிஸ் பணிவிட்டேன் என்று எண்ணினால் பதி வுகளைக் காணவில்லயே என்னாச்சு.

  பதிலளிநீக்கு