புதன், செப்டம்பர் 21

சாமியாருமா?

       ஒரு கோயில் மண்டபம். அங்கு,கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
        இதை   மேலே  இருந்து    கவனித்துக்கொண்டு  இருந்தார் கடவுள்.   "இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!" என்று நினைக்கும்போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
            'சரி, நேரில் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று சாமியார் பேசிக்கொண்டு    இருந்த     கோயில்    மண்டபத்தின்   அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.