திங்கள், ஏப்ரல் 30

ஆயிஷா

கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல்பரிசு பெற்ற நூல் ஆயிஷா. இரா.நடராசன் அவர்கள் எழுதிய ஆயிஷா என்ற அற்புதமான கதை ஏப்பிரல் 2005ல் பாரதி புத்தகாலயம் சிறுநூலாக ரூ5/- விலையில் வெளியிட்டிருந்தது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட ஏன்? எப்படி? என்ற நூலிலும் இந்தக்கதை முதல் பக்கத்தில் உள்ளது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரையாக இந்தக்கதை அமைந்திருக்கும். இதுவரை எட்டு மொழிகளில் இக்கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது.  இந்தக்கதையின் வீடியோ வடிவம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்று முதல் எட்டுவரை வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கான குறுவளமையப் பயிற்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய பிற ஆசிரியர்கள் மற்றும் அனைவரும் இந்த குறும்படத்தினை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, ஏப்ரல் 27

சாகித்ய அகாதமி

சாகித்ய அகாதமி பரிசு வாங்கிய நூல்களின் பெயர், வருடம் மற்றும் நூலாசிரியர்களின் பெயர்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை தமிழ் பாடம் ஆசிரியர் போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

  1.  தமிழ் இன்பம் (கட்டுரைகள்) - 1955 - ரா.பி.சேதுப்பிள்ளை
  2.  அலைஓசை (புதினம்) - 1956 - கல்கி கிருஷ்ணமூர்த்தி
  3.  சக்ரவர்த்தி திருமகன் - 1958 - இராஜாஜி
  4.  அகல்விளக்கு (புதினம்) - 1961 - மு.வரதராசன்

திங்கள், ஏப்ரல் 23

ஆசிரியர் தகுதி தேர்வு (TET)


ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
  • NAPE என்பது என்ன?  தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 1978
  • அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990
  • Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம்
  • சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814
  • தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970

ஞாயிறு, ஏப்ரல் 22

பச்சோந்தி பொழுதுகள்

நேரம் : அதிகாலை 4.00 மணி

இரவு முழுவதும் மொட்டைமாடியில் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. உடம்பு குளிர்ச்சியாக இருந்தது. ஆனால் மனம் இன்னும் சூடாக இருந்தது. முந்தைய இரவில் உணவு உண்ணாததால் வயிறு பசிப்பதுபோல் இருந்தது.

நாலு மணி இருக்குமா என எண்ணிக்கொண்டிருக்கும்போதே பால்காரனின் சைக்கிள் சத்தம்.

ம்ம்ம்... மணி நாலு ஆயிடுச்சு.

இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் இன்று தீர்ந்துவிட்டது. வேறு வழியே இல்லை.இன்று இரவு நிச்சயம் அதனை முடித்துவிடவேண்டும். கயிறுதான் சரியான வழி. நம் வீட்டில் அதற்கு சரியான கயிறு இல்லை.

வியாழன், ஏப்ரல் 19

TRB Education questions

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் (Education) சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே செல்லவும்.

  • In Tamilnadu, the Novodaya Schools are located - nowhere
  • Value Based Education can be imparted by - any teacher handling any subject
  • In october 1983, the principle of peace education was adopted in - Prayag
  • The definition for National Integration refers to - the fusion of sentiments of the People binding the nation

புதன், ஏப்ரல் 18

கல்வியியல் வினாவிடைகள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான  பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.



  1. நேரடிக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்க உதவுவதாக அமைந்திருத்தல்.
  2. எதிர்மறைக்கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக்கற்றது, வேறொரு செயலைக் கற்க தடையாக அமைந்திருத்தல்.
  3. சூன்ய கற்றல் மாற்றம் என்பது ஒரு செயலைக் கற்றது, வேறொரு செயலைக் கற்பதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமலிருத்தல்.
  4. இயல்பூக்க கொள்கையை கூறியவர்கள் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
  5. ஒற்றைக்காரணி - ஆல்பிரட் பீனே

திங்கள், ஏப்ரல் 16

மழலையின் மனதில்



உங்களுக்கென்ன? ஐந்து வயது வரை
அம்மாவுடன் உறவாடிவிட்டு
நண்பர்களுடன் விளையாடிவிட்டு
ஜாலியாக பள்ளிக்குச் சென்றீர்கள்!
வேற்று மொழிகூட
எட்டு வயதானபின்தான்!

ஞாயிறு, ஏப்ரல் 15

தொலைந்த முகம்

     என்றைக்கும் இல்லாமல் இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட்டேன். வானம் நீலநிறம் மறைத்து இருட்டினை பூசிக்கொண்டு இருந்தது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் வழக்கம்போல் டிவி அலறிக்கொண்டு தானும் இந்த வீட்டின் ஒரு அங்கத்தினர் என வெளிப்படுத்தியது. என் மனைவி தேங்காய் நறுக்கிக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.

வாங்க... இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்தாச்சு! என் முகம் பார்க்காமல் கேட்டாள். 

 இன்னைக்கு ஆபீஸ் ஸ்டாப் ஒருத்தரோட பொண்ணுக்கு நிச்சயதார்த்தம். 
ஏழு மணிக்கு வரச்சொன்னார்.

மணி இப்பவே ஏழாயிடுச்சு. 

பொது அறிவு (TRB)

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு(General knowledge) சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு. முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.

  • உலக வர்த்தக நிறுவனம் ஜெனிவாவில் உள்ளது.
  • சார்க் தலைமையிடம் காத்மாண்டு
  • SAARC  என்பதன் விரிவாக்கம் South Asian Association for Regional Cooperation.
  • குச்சிப்பிடி நடனம் ஆந்திராவில் தோன்றியது.

சனி, ஏப்ரல் 14

பொது அறிவு

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பொது அறிவு சம்பந்தமான வினாக்களின் தொகுப்பு.
  • 1. 2012ல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது? - இலண்டன்
  • 2.தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் எத்தனை? - 32
  • 3.சூரிய கதிர்வீச்சினை அளவிட - பிரிஹிலியோ மீட்டர்
  • 4.காற்றின் ஈரப்பதத்தினை அறிய - ஹைக்ரோ மீட்டர்
  • 5.மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

வியாழன், ஏப்ரல் 12

மாணவர்களை மனிதனாக்கும் கல்வி

        இன்றைய கல்வி முறை சரியா? தவறா? என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இன்றைய கல்வி முறையில் இன்னும் நிறைய விசயங்களைச் சேர்த்திருந்தால் சிறப்பாக இருக்கும். வெறும் தமிழும், அறிவியலும், கணிதமும் ஒருநாளும் மாணவனை மனிதனாக மாற்றாது. செத்துப்போனவர்களைப் பற்றியே படிப்பதால் அவனுக்குள் மனமாற்றம் நிச்சயம் வரப்போவதில்லை. பழமையோடு புதுமையையும் கொஞ்சம் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் விருப்பங்கள் இங்கு மதிக்கப்படுவதில்லை. வரும் அதிகாரிகளும் வெறும் புள்ளிவிபரங்களை மட்டுமே பார்த்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் அல்லது திட்டிவிட்டுச் செல்கிறார்கள். பாடத்தினைத் தவிர்த்து மாணவன் பெரும்பாலும் வேறு எதனையும் கற்றுக்கொள்வதில்லை. 

செவ்வாய், ஏப்ரல் 10

TRB EDUCATION - TET PAPER I AND PAPER II - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

ஆசிரியர் தேர்வு வாரியத்தினால்(TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு(TET)  மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் பகுதியில் கேட்கப்படும் வினாக்களின் தொகுப்பு இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி : கல்விச்சோலை

திங்கள், ஏப்ரல் 9

கல்வியியல்

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.


1.நுண்ணிலை கற்பித்தல் என்பது - திறன் குறித்தது
2.ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது- செய்து அல்லது செயல்
3. ______மாற்றத்தை கற்றல் ஏற்படுத்தும் - நடத்தை

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) மாதிரி வினா விடைகள்

     தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வினாக்கள் அமைந்திருக்கும் (மொழிப்பாடங்கள் தவிர).நெகடிவ் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. தேர்வு நேரம் 1.30 மணி நேரம்.முதல் தாளானது (12 TET 01) 1 முதல் 5 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதக் காத்திருப்பவர்களுக்கு  மாதிரி வினாத்தாள் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதற்கான விடைகள் இங்கே உள்ளது.

ஞாயிறு, ஏப்ரல் 8

கல்வியியல்

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான ( TRB PG) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல்(Education) சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு.  இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும். தங்களின் மேலான கருத்துக்களைத் தெரிவித்தால் எனக்கு அது உற்சாகமாக அமையும். இதற்கு முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்து பார்க்கவும். மேலும்
அனைத்துப் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு.  மற்றும் முதுகலை தாவரவியல் பாடத்திற்கான வினாக்களின் தொகுப்பு இங்கே உள்ளது.

சனி, ஏப்ரல் 7

கல்வியியல் வினாக்கள் (Education questions)

முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
1.பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
2.பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
3.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
4.வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60

வெள்ளி, ஏப்ரல் 6

கல்வியியல் வினாக்கள் (Education questions)

முந்தைய வினாக்களைக்காண இங்கே கிளிக் செய்யவும்.
1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

கடவுள் படைப்பு

      அன்று பிள்ளையார் சதூர்த்தி. காலையில் விக்னேஷ் சீக்கிரம் எழுந்துவிட்டான். அவனுக்கு பிள்ளையார்மீது எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு.
பிள்ளையாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருக்கும்.    

பிள்ளையாரைப்பற்றி அவன் நண்பன் சதீஸிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். போதும்டா! உன் புராணத்தை ஆரம்பிச்சுட்டியா... என்பான் சதீஸ்.

வியாழன், ஏப்ரல் 5

கல்வியியல் வினாக்கள் (Education questions)

முந்தைய வினாக்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT

புதன், ஏப்ரல் 4

கல்வியியல் வினாக்கள் (Education questions)

ஆசிரியத்தேர்வு வாரியத்தினால் (TRB)  நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான (PG TRB EDUCATION) போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கல்வியியல் சம்பந்தமான மாதிரி வினாக்களின் தொகுப்பு. இனிவரும் பதிவுகளிலும் வினாக்கள் தொடரும். இதனை வாசிப்பவர்கள் தயவுசெய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வாசித்து அனைவரும் பயன்பெறவும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கவும்.