இரா.நடராசன் அவர்கள் எழுதிய உலக பெண் விஞ்ஞானிகள் என்ற நூலில் இதுவரை நாம் கேள்விப்படாத பெண் விஞ்ஞானிகளின் பட்டியலைத் தந்துள்ளார். பெண் விஞ்ஞானிகள் யார்? யார்? எனக்கேட்டால் நிச்சயம் ஒரு சில பெயர்களைத்தவிர யாரையும் நமக்குத்தெரியாது.உலகின் முதல் விஞ்ஞானி ஒரு பெண்ணாகவே நிச்சயம் இருந்திருக்கவேண்டும் என சிந்தனையாளர் லெவிஸ்ட்ராஸ் குறிப்பிட்டுள்ளார். ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களைத் தெரிந்திருக்கும் அளவுக்கு பெண் விஞ்ஞானிகள் பெயர்களை நாம் தெரிந்திருப்பதில்லை. அதற்கான காரணம் ஆணாதிக்கமா? அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. பெண்களின் சிந்தனைகளை வளரவிடக்கூடாது என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம்.