தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ( Continuous and Comprehensive Evaluation )
வரும் (2012 - 2013 ) கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முப்பருவத்தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தகங்கள் தொகுதி 1 ல் தமிழ் மற்றும் ஆங்கிலமும், தொகுதி 2 ல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலும் இருக்கும். மூன்று பருவத்திற்கும் தனித்தனிப் புத்தகங்கள் வழங்கப்படும். முதல் பருவம் ஜீன் முதல் செப்டம்பர் வரை, இரண்டாம் பருவம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, மூன்றாம் பருவம் ஜனவரி முதல் ஏப்பிரல் வரை இருக்கும்.1 முதல் 8ம் வகுப்புவரை மதிப்பீடு முறையானது CCE முறையில் இருக்கும்.