நாம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கலாம். நடந்து சென்றால் 5 அல்லது 6 கிலோமீட்டர். பேருந்தில் பிரயாணித்தால் 60 -80 கி.மீ.விமானத்தில் சென்றால் 400 - 500 கி.மீ. சில விமானங்கள் மணிக்கு 1500 கி.மீ கடக்கும் வல்லமை பெற்றுள்ளன. ராக்கெட்டுகள் இதைவிட அதிக தூரத்தை (சுமார் 20,000 கி.மீ) கடக்கலாம். இவற்றையெல்லாம் 'கி.மீ ' என்ற அலகால் எளிதில் அளந்து விடுகிறோம்.