சனி, பிப்ரவரி 4

அறிவியல் ஆனந்தம் 4

அறிவியல் ஆனந்தம் 1
அறிவியல் ஆனந்தம் 2
அறிவியல் ஆனந்தம் 3

அறிவியல் ஆனந்தம் 4  பகுதியில் சில சுவாரஸ்யமான துணுக்குகள்.


                                                மின்மினிப்பூச்சிகளுக்கு ஒளி உண்டாவது எப்படி?


மின்மினிப்பூச்சியின் அடிவயிற்றுப்பகுதியில் தனிச்சிறப்பான செல்களில் லூஸிஃபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படும். இந்த செல்களுடன் சுவாசக்குழல் தொடர்பு கொண்டிருப்பதால் ஆக்ஸிஜன் சேர்ந்து வினைபுரிந்து ஒளியைத் தருகிறது.இதற்கு லூஸிஃபெரேஸ் என்ற நொதி அவசியமாகிறது.