புதன், பிப்ரவரி 29

அறிவியல் ஆனந்தம் 6

மனிதன் குரங்கிலிருந்து வந்தால் குரங்கு எதிலிருந்து வந்தது?
     சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரிடமிருந்து இரண்டும் தோன்றின.லெமூர்கள், லாரிஸ் மற்றும் டார்சியர் இனங்கள் 500 லட்சம் வருடங்களுக்கு முன் தனியாகப் பிரிந்தன. சுமார் 300 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமிநோய்டியா என்ற ஒரு தொகுதி பழங்கால குரங்குகளிடமிருந்து பிரிந்தது. இத்தொகுதி மனிதனையும், மனிதக்குரங்குகளையும் உள்ளடக்கியது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

திங்கள், பிப்ரவரி 27

பூச்சி மொழிகள்

எறும்பு மொழி :
         எறும்புகளின் மீசைகள் அவற்றின் உணர்வுகளைத் தெரிவிக்கின்றன. அதாவது வேதியியல் முகர்ச்சி மூலம் பேசுகிறது. எறும்புகள் ஒன்றையொன்று தீண்டுவதில்தான் அவற்றின் மொழி இருக்கிறது. மீசையைத் தீண்டுவதிலுள்ள இடைவெளியினைப் பொறுத்து அவற்றின் எண்ணங்கள் மாறுபடுமாம். அதனுடன் தாடைகளை திறப்பது, மூடுவது போன்ற அங்க அசைவுகளாலும் எண்ணங்கள் மாறுபடும்.

சனி, பிப்ரவரி 25

அறிவியல் ஆனந்தம் 5

கரையான் புற்று எப்படி வலுவாக உள்ளது?
கரையான்கள் கட்டும் கூட்டுக்கு டெர்மிட்டோரியம் அல்லது புற்றுக்கள் என்று பெயர். இதனைக் கட்ட மண், மரத்துண்டு மற்றும் கரையான்களின் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கரையான்களின் உமிழ்நீருடன் கலந்து கெட்டிப்படுத்தப்பட்டு அரண்மனை போன்ற அமைப்புடன் கட்டப்படுகின்றன. இதில் பாலங்கள், கால்வாய்கள், உணவுகிடங்குகள், ராணியின் அறை என பல அடுக்குகளாக கூம்பு வடிவில் கட்டப்படுகின்றன. இவை சிமெண்டால் கட்டியது போன்று மிக வலிமையாய் இருக்கும்.

வியாழன், பிப்ரவரி 23

கடவுள் இல்லமும் கல்லாப்பெட்டியும்

இரவு நேரம்
தன் இல்லத்தில்
கடவுள் 
"சுவிட்சை ஆன்'
செய்தார்
எரிந்தது
   ஒளிரும் வண்ண
     நட்சத்திரங்கள்!!

திங்கள், பிப்ரவரி 20

கம்மா வேலை

         2008 மே முதல் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஒரு குடும்பத்திற்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு அதற்கு கூலியாக ரூ 80 (2009 - ரூ120 இப்போ எவ்வளவுனே தெரியல!!!). தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். இதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

வெள்ளி, பிப்ரவரி 17

விருது

        என் எழுத்தினை யாரும் கவனிப்பார்களா? என்ற சந்தேகத்துடன் நான் பதிவுலகில் காலடி(கையாலதான் டைப் பண்றோம்) எடுத்துவைத்து சில மாதங்களில் கிடைத்த அங்கீகாரம் இரண்டு விருதுகள். யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய "`Versatile Blogger Award ". மனமகிழ்வுடன் இதனை ஏற்கிறேன் (விருது கிடைச்சா வேண்டாம்னா சொல்வோம்). எனது பதிவிற்காக அவர் வழங்கிய இந்த விருதுக்கு எனது நன்றி.

திங்கள், பிப்ரவரி 13

நூறாவது காதல்

வணக்கம் நண்பர்களே...
                    காதலர் தினத்தன்று என்னுடைய நூறாவது பதிவு. வலைச்சரத்திலும் ஆசிரியர் பணியாக இந்த வாரம் முழுவதும் பொறுப்பு.தொடர்ந்து உற்சாகப்படுத்தும் கீதா, இராஜராஜேஸ்வரி, சி.பி.செந்தில்குமார், திண்டுக்கல் தன்பாலன், தமிழ்வாசி பிரகாஷ், சகோதரி ராஜி, யுவராணி தமிழரசன், ரத்தினவேல் ஐயா, ஹேமா, சசிகலா, ஆமினா, ஸாதிகா, வீடு சுரேஷ், லட்சுமியம்மா, ஸ்ரவாணி, ஆஸியா ஓமர், விமலன், நண்பர் Suryajeeva , மாலதி இன்னும் நிறைய நண்பர்கள் தொடர்ந்து கருத்துக்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தும் உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

வெள்ளி, பிப்ரவரி 10

தமிழகம்

வகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை: 9ம் வகுப்பு மாணவர் கைது
கரெண்ட் கட் - கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி இன்னும்...
இதுக்கு மேலே என்னத்த சொல்ல...???சனி, பிப்ரவரி 4

அறிவியல் ஆனந்தம் 4

அறிவியல் ஆனந்தம் 1
அறிவியல் ஆனந்தம் 2
அறிவியல் ஆனந்தம் 3

அறிவியல் ஆனந்தம் 4  பகுதியில் சில சுவாரஸ்யமான துணுக்குகள்.


                                                மின்மினிப்பூச்சிகளுக்கு ஒளி உண்டாவது எப்படி?


மின்மினிப்பூச்சியின் அடிவயிற்றுப்பகுதியில் தனிச்சிறப்பான செல்களில் லூஸிஃபெரின் என்ற வேதிப்பொருள் காணப்படும். இந்த செல்களுடன் சுவாசக்குழல் தொடர்பு கொண்டிருப்பதால் ஆக்ஸிஜன் சேர்ந்து வினைபுரிந்து ஒளியைத் தருகிறது.இதற்கு லூஸிஃபெரேஸ் என்ற நொதி அவசியமாகிறது.

வெள்ளி, பிப்ரவரி 3

தமிழ்மணத்தில் பதிவுகளை தற்காலிகமாக சேர்த்தல்

தற்போது கூகுள் பிளாக்கர் முகவரிகளை இந்தியாவில் .in என மாற்றியுள்ளது.ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au எனவும் தெரிவதாகக் கூறுகிறார்கள்.எதற்காக என்றால் அந்தந்த நாட்டின் சட்டதிட்டத்தின் படி பிரச்சினையான கருத்துகள் இருந்தால் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்குவது எளிதாக இருக்கும்.தமிழ்மணத்தில் புதிய பதிவை இணைக்கும் போது உங்கள் பதிவு எங்கள் பட்டியலில் இல்லை எனக் காட்டுகிறது.ஏனெனில் தமிழ்மணம் திரட்டியிலே .com என்று முடியும் வகையில் தான் அனைத்து பதிவுகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான தற்காலிகத் தீர்வாக