உலகம் குழந்தையாக இருந்தபோது எனும் நூலில் இந்தியப் பழங்குடியினரின் பலவகையான பழங்கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த அழகிய நூலைத் தமிழில் பிரிஜிட்டா ஜெயசீலன் எழுதியுள்ளார். சில கதைகள் சுவாரஸ்யமானவை. மலைவாழ் மக்கள் மனிதன் தோன்றியது குறித்துப் பல்வேறு அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். சிலர், கடவுள் தம் கைகளினால் முதல் மனிதனைக் களிமண் கொண்டு உருவாக்கினார் எனக் கூறுகிறார்கள்.