கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. . அதில் ஒரு மாட்டுத்தோலிலான பை கட்டி நீர் இறைப்பார்கள். அதன் பெயர்கூடத் தெரியவில்லை.அதன் புகைப்படம் தேடினாலும் கிடைக்கவில்லைஅதுபோல நெல்லினை சேமித்து வைக்கும் குலுக்கை என்று சொல்வார்கள். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி இன்னும் நிறைய பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் இருந்து தொலைந்து வருகின்றன.