மனிதனுக்கு ஏற்படும் கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை மற்றும் இருமல் இவை எல்லாமே நம் உடற்செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகள்தான்.
கொட்டாவி :
ஆவ்வ்வ்வ்வ்..... நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல் கொட்டாவி ஆகும். கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகின்றனர். ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்போதும் கொட்டாவி வரலாம். நாம் உள்ளிழுக்கும் காற்று ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க துணை புரியலாம் என்கிறது ஒரு ஆய்வு. கொட்டாவி விடுபவர்களைப் பார்த்தாலே கொட்டாவி வரலாம். இம்புட்டு ஏன்.. கொட்டாவின்னு டைப் பண்ணும்போதே ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு கொட்டாவி வருகிறது. கொட்டாவி ஒரு தொற்றுச்செயல்.