சனி, ஜனவரி 14
அப்போ ஒரு சொல்...இப்போ ஒரு சொல்
கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன் என்ற நூலில் இருந்து வேற்றுமொழி என்னும் தலைப்பில் ( தமிழில் சுரா).. . சோதிடரின் முகமூடியை கிழிக்கும் அதேவேளையில் ஒரு குழந்தையின் மனநிலையை, எதுவாக ஆக வேண்டும் என்ற நிலையை குழந்தையின் எண்ணமாக அவர் சொல்லும் விதம் வியக்கவைக்கும். நான் படித்து ரசித்த விசயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
நரி
நம் மனதைப்பற்றிய கலீல் ஜிப்ரானின் நரி என்றொரு கதையில்... காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது : "எனக்கு இன்று காலை உணவுக்கு ஒரு யானை கிடைக்க வேண்டும்.'
யானையைத்தேடி மதியம் வரை அ து அலைந்து திரிந்தது. ஆனால், மதியம் தன் நிழலைப்பார்த்து நரி சொன்னது : " எனக்கு ஒரு எலி கிடைத்தால் கூட போதும்!'.
நம்முடைய மனமும் இப்படித்தான். நமது பலமும், பலவீனமும் ஒரே சமயத்தில் மனதில் இடம்பெற முடியாது. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக அவை வெளிப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)