புதன், ஜூலை 4

கமு.. கபி


கல்யாணத்துக்கு முன் கல்யாணத்துக்குப்பின்
அன்பே லூசே
நீ பேசினால் காதில் தேன் பாய்கிறது வாயை கொஞ்சம் மூடு
உனக்கு இந்த டிரெஸ் சூப்பர் என்னடி டிரெஸ் இது.. பிச்சைக்காரி மாதிரி
மொபைலில் நீ பேசிக்கிட்டே இருக்கனும் ம்ம்.. அப்புறம்.. சரி.. வை
உன் கை பட்டா எல்லாமே சூப்பர் கையை வச்ச வெட்டிருவேன்
உன் பக்கத்தில் உட்கார்ந்தா சொர்க்கம்  தள்ளிதான் உட்காரேன்
நீ சமைச்சாலே வாசனை தூக்குது என்னடி குழம்பு வச்சிருக்க.. உப்புமில்லை. உறப்புமில்லை
நீ பார்த்தாலே பத்திக்குது நீ பார்த்தாலே பத்தி எரியுது
நீ சிரிச்சாலே சொக்குது அதென்ன சிரிப்பு .. வாயை கோணிக்கிட்டு
இன்னும் கொஞ்ச நேரம் பேசேன் தூங்க விடு
உன் மடியில படுக்கணும் கொஞ்சம் தள்ளிப்படு
தியேட்டருக்கு வந்தாலும் உன்னையத்தான்  பார்க்கனும்போல இருக்கு சினிமாவப் பார்க்க விடுறியா
நீ விடிய விடிய பேசினாலும் கேட்டுக்கிட்டே இருப்பேன் கொர் ... கொர்...

அழகான பாடல் ஒன்று :
கொசுறு: கல்யாணத்துக்கு அப்புறமும் கல்யாணத்துக்கு முன்னாடி மாதிரியே இருங்க... வாழ்க்கையும் இனிக்கும்.

புத்தகச் சுமை

தனியார் பள்ளிகள், தேவையில்லாத நோட்டுப் புத்தகங்களை மாணவர்கள் கொண்டுவர நிர்பந்தம் செய்யாமல், தேவையானவற்றை மட்டுமே கொண்டு வர, பள்ளி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா உத்தரவிட்டார்.
இளம் வயதிலேயே, அதிகமான புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சுமப்பதால், மாணவ, மாணவியர், முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.