டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக் கொள்ளும் எரிபொருள் ஆகும். பெட்ரோல் எஞ்சினில் கார்புரோட்டல் மூலம் ஆவியாக்கப்பட்ட பெட்ரோல் ஆவியும் காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6 முதல் 8 மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது. இதனால் விசை உண்டாகிறது.